இது முதன்முதலில் வெளி வந்ததது பி.சி.சுக்ராம் தொலை தொடர்பு துறை மந்திரியாய் இருந்தபோது. அவர் அன்றைக்கு 400 கோடி ஊழல் செய்தார் என்று மட்டுமே பலருக்கு தெரியும். அது சாட்சாத் இந்த அலைகற்றை ஊழலே. அலைக்கற்றை பற்றி அவ்வளவாக புரியாத காலமாதலால் 2 வருட சிறை தண்டனையை மட்டும் அனுபவித்து விட்டு சந்தோசமாய் லண்டனில் குடியேறிவிட்டார்.
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது 1991-ம் ஆண்டு முதல் 1996 வரை மத்திய தொலை தொடர்பு துறை மந்திரியாக இருந்தவர், சுக்ராம்.
அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 1997-ம் ஆண்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியபோது ரூ.5 கோடியே 36 லட்சம் பணம் மற்றும் முறைகேடான சொத்து ஆவணங்கள் கிடைத்தன. இதையடுத்து சுக்ராம் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை, சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது. சுக்ராம் மீதான குற்றம் நிரூபணமானதை தொடர்ந்து, அவருக்கு 82 வயது ஆவதால் குறைந்தபட்ச தண்டனை அளிக்குமாறு அவருடைய வக்கீல் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், முன்னாள் மத்திய மந்திரி சுக்ராமுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிபதி மகேஸ்வரி உத்தரவிட்டார்.
சிறைத்தண்டனை தவிர ரூ.2 லட்சம் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டது. எனினும், தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வதற்காக ஏப்ரல் 23-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவரை, ரூ.50 ஆயிரத்துக்கு இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி அனுமதித்தார்.
தொலை தொடர்பு துறையில் இப்படி ஒரு அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும் என்றும், எதிர் கால அலைக்கற்றை அடர்த்தியின் நிலை பன்மடங்கு உயரும் என்றும் அறிந்திருக்கவில்லை. அதன்பிறகு வந்த மாறன் தொலை தொடர்பு துறையை தன் வசமாக்கினார். பலரது எதிர்ப்புகள் எழுந்த போதும் அத்துறையை இறுக பிடித்து கொண்டார். ஏற்கனவே சன் நெட்வொர்க் மூலம் தொலை தொடர்பின் நுணுக்கங்களை அறிந்திருந்த அவர், சுலபமாக கோடிகளை குவித்தார். ஊழல் பணத்தை அவர் சாதுர்யமாக சன் டி.வி.யின் மூலம் கொண்டு வர சிக்கல் உருவானது. மு.க. மாறனின் பதவியை பறித்தார். மாறன் பதவி பறிக்கபடுவதற்கு முன்னமே அடுத்து வரப்போகின்ற ஏலமான 2 G ஊழலுக்கான அடித்தளங்களை இட்டிருந்தார். ஏற்கனவே பங்கில்லாமல் பொங்கி எழுந்திருந்த மு.க. தனக்கு சாதகமான ஆளை டில்லியில் வைக்க விரும்பி, ஆங்கிலம் பேச தெரிந்த ஆண்டிமுத்து ராசாவை அமைச்சராக்கி மொத்த பணத்தையும் தானே சுருட்ட திட்டமிட்டார். கண்கொத்தி பாம்பாய் கனிமொழி கண்காணித்தார். மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஆட்சியில் ராசாவுக்கு தொலை தொடர்பு துறை கிடைக்க வேண்டும் என்றும் எல்லா வேலைகளும் செய்த கனிமொழி, மீண்டும் அத்துறை மாறனுக்கு போக கூடாது என்பதிலே குறியாக இருந்தார். ஏற்கனவே செய்த ஊழலின் பங்கு பணத்தை மு.க.விற்கு அளித்தும் (ராடியா-டாடா உரையாடலை U-TUBE இல் கேளுங்கள். மாறன் தயாளுவிடம் 600 கோடி கொடுத்தது தெளிவாக கேட்கிறது) மாறனுக்கு வேறு துறையே வழங்கப்பட்டது. 2 g பணத்தில் தனக்கு பங்கு இல்லை என்று நன்றாக தெரிந்து கொண்ட மாறன் சன் டி.வி.யின் மூலம் ஊழலை வெட்ட வெளிச்சமாக்க முயற்சி செய்தார். பணச்சண்டையான இதை ஏதோ குடும்ப சண்டை போல காட்டிக்கொண்ட மு.க. பின் கண்கள் பனித்து, இதயம் இனித்து முடித்து வைத்தார்.
இந்தியாவில் அரசியல்வாதிகள் அதிலும் காங்கிரஸ் தி மு க போன்ற கட்சியின் அரசியல்வாதிகள் உறுதியாக எந்தக் காலத்திலும் தண்டிக்கப் படப் போவதே கிடையாது. அது உறுதியாகத் தெரிந்து வைத்திருப்பதினால்தான் நகர்வாலா, குவோ எண்ணெய் ஊழல் போன்றவற்றில் துவங்கி போஃபோர்ஸ், காமன் வெல்த் கேம்ஸ், ஆதர்ஷ், ஸ்பெக்ட்ரம் வரை அலுக்காமல் சலிக்காமல் எந்த வித பயமும் இல்லாமல் தொடர்ந்து இந்தியாவை நேருவின் வாரிசுகள் கொள்ளையடித்து வருகிறார்கள். இந்தியர்களுக்கு அடிமையாக இருப்பதில் ஒரு தனியாத போதை, சுகம் உள்ளது. முகலாயர்கள், பிரிட்டிஷ்காரர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள் எல்லாம் ஆண்டு விட்டார்கள். இந்த இத்தாலிக்காரர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் அவர்களுக்கும் ஒரு பெரிய வாய்ப்பைக் கொடுப்போமே என்று தாராளமாக கொள்ளையடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment