Thursday, 23 June 2011

மெழுகுவத்தி தயாரிப்பது எப்படி: ஓய்வு நேரத்தில் கனிமொழி பயிற்சி

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, ஓய்வு நேரத்தில் மெழுகுவத்தி செய்ய கற்றுக்கொள்வதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனிமொழி, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், கடந்த மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், புத்தகங்களை படிப்பதில் நேரத்தை கழித்து வந்தார். இந்நிலையில், தற்போது, தன் ஓய்வு நேரங்களில், பெண் கைதிகளோடு இணைந்து மெழுகுவத்தி தயாரிக்கும் முறையை கற்று வருவதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  
இந்த தொழிலை தமிழ் நாட்டில் மின்சார பற்றா குறை இருந்து இருண்ட பொது தொடங்கி இருந்தால் - "மக்கள் வாழ்க்கையில் விளக்கு ஏற்றிய கனிமொழி" என்று ஒரு மொக்க பப்ளிசிட்டி செஞ்சிருக்கலாம்.



No comments:

Post a Comment