மீண்டும் ஸ்பெக்ட்ரம் புயல் வீசிக் கொண்டிருக்கிறது. இந்த புயலில் சிக்கிக் கொண்ட ராஜா, கனிமொழி மற்றும் கம்பெனி நிர்வாகிகள், திகார் சிறையில் நாட்களை கழித்துக் கொண்டிருக்கின்றனர்.தி.மு.க., அமைச்சர் தயாநிதி மாறனும், இந்த புயலில் சிக்கியுள்ளார்.அமைச்சர் தயாநிதி மாறனும், இந்த புயலில் சிக்கியுள்ளார். சிங்கப்பூர் தொழில் அதிபர் சிவசங்கரனை கட்டாயப்படுத்தி, லைசென்ஸ் கொடுக்காமல் காலதாமதப்படுத்தியதாக மாறன் மீது குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த 2001 முதல் 2007 வரை கொடுக்கப்பட்ட லைசென்ஸ்கள் தொடர்பான வழக்கை பதிவு செய்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. விரைவில் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த உள்ளனர்.இந்த ஸ்பெக்ட்ரம் புயலில், சமீபத்தில் சிக்கியுள்ளவர் உள்துறை அமைச்சர் சிதம்பரம்.
இம்முறை 200 எம்.பி.,க்கள் காங்கிரசுக்கு இருந்தாலும், தள்ளாடிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம், காமன்வெல்த் ஊழல், தற்போது ஊழலுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற நெருக்கடி என, மூச்சுவிட நேரம் இல்லாமல் நெருக்கடியில் திண்டாடிக் கொண்டிருக்கிறார் மன்மோகன் சிங்.இப்படி அரசை நடத்த முடியாமல், பிரச்னைகளை தூண்டிவிட காரணம் யார் என்பது குறித்து உளவுத் துறை, பிரதமருக்கு ஒரு ரகசிய அறிக்கை அளித்துள்ளது. அதில், ஒன்பது பிரமுகர்கள், அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர். யோகா சந்நியாசி ராம்தேவ், அன்னா ஹசாரே உட்பட ஒன்பது நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை உளவுத்துறை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த ஒன்பது நபர்களின் நடவடிக்கைகள் கூர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அவர்கள் என்ன செய்கின்றனர்; யாரை சந்திக்கின்றனர்; அவர்களின் திட்டம் என்ன; அரசுக்கு எதிராக என்ன செய்ய போகின்றனர் என, கண்காணிப்பு நடக்கிறது.இந்த ஒன்பது பேர் லிஸ்டில், மூன்று பேர் தமிழர்கள்.
No comments:
Post a Comment