"லோக்பால் மசோதா தயாரிப்பில் இனி ஹசாரே தலைமையிலான மக்கள் நல அமைப்புகள் அமைப்பின் கருத்தை கேட்கமாட்டோம். அதற்கான வரைவு மசோதாவை அரசே தயாரிக்கும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
பிரதமர், தலைமை நீதிபதி உள்ளிட்டோரையும் விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும் என, ஹசாரே வற்புறுத்தி வருகிறார். இதற்கு அரசு தரப்பில் ஒப்புக்கொள்ளவில்லை. வலுவுள்ள அமைப்பாக லோக்பாலை உருவாக்காவிட்டால், ஆகஸ்ட் மாதம் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
My Comment:
2 G விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை, அதனால் அரசாங்கத்திற்கு எவ்வித நஷ்டமும் இல்லை என்றெல்லாம் பேசியவர்களும் லோக்பால் வரைவு மசோதா குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில் வேறு எந்த மாதிரியான பேச்சுக்களை எதிர்பார்க்க முடியும். அப்படி ஏதும் இல்லை என்றால் எதற்கு உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றங்களும், திகார் ஜெயிலும்? இந்திய மக்கள் அனைவரும் ரொம்ப நல்லவங்கப்பா. அதனால் எல்லா நீதிமன்றங்களையும், ஜெயில்களையும் இழுத்து மூடிவிடுங்கள்.
அரசியல் சட்டத்தின் முன் எல்லாரும் சமம்னு சொல்லிட்டு பிரதமரையும் தலைமை நீதிபதியையும் மக்களை விட்டு வேறுபடுத்துவது முன்னுக்கு பின் முரணான ஒன்று. சுதந்திரம் கிடைத்த உடன் காங்கிரஸ் கட்சியை காந்தி நினைத்தது போல கலைத்து இருந்தால் இந்தியாவுக்கு இந்த வேதனை வந்து இருக்காது. திருடன் கிட்ட போயி சட்டத்தை உருவாக்க சொன்னால் திருடுவதை அரசியல் சட்டப்படி சரி என்று சொல்லி தான் சட்டம் இயற்றுவான்.
நம் நாடு பணம் வெளிநாட்டில் இருக்கிறது அதை கொணர்து நாட்டை முன்னேற்ற பார்காமல் விலை வசியை ஏற்றிவிட்டுக்கொண்டு ஊழலை ஊதிவிட்டுக்கொண்டு இருக்கும் வெளிநாட்டு அடிமை காங்கிரஸ் பச்சோந்திகள் ஏழைகளின் பொறுமையை அதிகமாகவே சோதிக்கிறார்கள். ஹசறேயின் குரல் அவர் ஒருவருடையது மட்டுமல்ல, நியாயம் அட்ட்றது மட்டுமல்ல. அன்று வெளிநாட்டவரிடம் சுதந்திரம் வேண்டி போராடினார்கள். இன்று வெளிநாட்டு சுயநல அடிமழை எதிர்த்து நம்மவர்களிடமே போராடவேண்டியுள்ளது.
No comments:
Post a Comment