ராம்தேவிற்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புக்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., வினர் பல்வேறு இடங்களில் அமைதிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பலர் ராம்தேவிற்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அகிம்சை முறையில் சுதந்திரம் பெற்று முதன் முதலில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் கூட இன்று அகிம்சை முறையில் போராடுவோரையும் ஹிம்சை செய்கிறது. எல்லாவற்றுக்கும் காவி என்று சாயம் பூசுவதை விட தொலை நோக்கு பார்வையில் பாருங்கள். அவர் எந்த சமூகத்தில் இருந்து வந்து போராடுகிறார் என்று பார்ப்பதை விட எதற்காக, யாருக்காக போராடுகிறார், எதற்காக போராடுகிறார் என்று மட்டும் பாருங்கள்.
காந்தி உப்பு சத்தியாகிரகம், உண்ணாவிரதம், வெள்ளையனே வெளியேறு, என்று இப்போது சொன்னால் அவரை குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே போடும் அளவுக்கு காங்கிரஸ் வளர்ந்து நிற்கிறது. ஜால்ரா போடும் கூட்டணி கட்சிகள் இருக்கும் வரை மூச்!!!!! யாரும் வாய் திறக்கக்கூடாது, சாப்பிட மட்டும் திறந்தால் போதும்.
ஊழல் என்பது தேசிய மையமக்கபட்ட ஒன்று. அதை எப்படி நிறுத்த முடியும்.
ஊழல் செய்தவர்கள், கருப்பு பணம் பதுக்கியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஒரு அரசாங்கம் தேவையா ? இது தான் ஜனநாயகமா?
அரசியல்வாதிகள் ஊழலை ஒழிக்க பிறந்தவர்கள் அல்ல. ஊழலை ஒழிப்பது போல் நடிக்க பிறந்தவர்கள். அதிலும் குறிப்பாக கான்கிரஸ் கட்சிகாரர்க்கள். ஊழலை எதிர்த்து ஒரு குற்றவாளி போராடினாலும் அதற்கு ஆதரவு தரவேண்டியது தார்மீக கடமை. இதனை ஒவ்வொரு இந்தியனும் போர்க் குணத்துடன் செய்யவெண்டும். அதுவும் இது போன்ற கோரிக்கைகளுக்கு மிக விரைவில் தீர்வு காணப் படல் வேண்டும் இந்த 10 கோரிக்கைகளையும் 72 மணி நேரத்துக்குள் நிறை வேற்றப் பட வெண்டும.
அப்சலை துக்கிலட மறுக்கும் காங்கிரெஸ் ஊழலை எப்படி ஒழிக்கும் ?
வளைகுடா நாடுகளில் முஸ்லீம் மக்கள் போராடி கொடுங்கோல் அரசுகளிடம் விடுதலை பெற்றுக்கொண்டிருப்பதை போல...நமது இந்திய தேசியாவிலும் வேண்டும் ஒரு யுக புரட்சி...ஊழல்வாதிகளை ஒழிக்க இதுவே தருணம்....தேசிய அளவிலான போராட்டத்தை தொடங்குவோம்...
எல்லோரயும் லோக்பால் சட்டத்தின் முன் சரி சமமாய். முடியாவிட்டால் ஊழலை தேசியமயமாக்குங்கள். எங்கள் கருணாவை தலைவராக்குங்கள். ஊழலையாவது கட்டி காப்போம் ஜனநாயகத்தை கட்டி காக்க முடியாத பட்சத்தில்.
ஊழலை ஒழிப்பேன் என்று கனவில் கூட நினைக்காத இரு பெரும் அரசியல் வாதிகளில் முன்னால் முதல்வர் கருணாநிதி அவர்களும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாகாந்தி இருவர் மட்டுமே. பிரிவினைவாதம் இல்லாத ஊழல் அற்ற நிர்வாகம் தரும் உள்ளம் கொண்டவர்கள் மட்டும் அரசியலில் ஈடுபடவேண்டும். இளைய சமுதாயத்தினர் அரசு நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு வரவேண்டும்.
No comments:
Post a Comment