Saturday, 4 June 2011

கருணாநிதி சொன்னார்... "மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்திருக்கின்றனர்;

அறியாமை மட்டுமல்ல, அகம்பாவம், ஆணவம், அதீத கோபம் எல்லாம் இருந்தன. தலைமைப் பொறுப்புக்குத் தகுதி இல்லாத தலைவர் என்பதை, கருணாநிதியே, வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு அசலான வீரன், தான் தோற்கடிக்கப்பட்ட போது, என்ன சொல்வான்? எப்படி நடந்து கொள்வான்? தன் எதிரியின் வீரத்தை வியப்பான். தன் தோல்வியை அடக்கமாக ஒப்புக் கொள்வான். இதே சூழ்நிலையில், 1967ம் ஆண்டு காமராஜர் இருந்தார். மாபெரும் தோல்வியை அவர், அப்போது சந்தித்தார். அப்போது, காமராஜரைச் சந்திக்கச் சென்ற தியாகி சத்தியமூர்த்தி மகனும், இலக்கியப் பதிப்பாளரும், பின்னர் ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக இருந்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தியிடம், காமராஜர் சொன்னார்... "எதுக்காக வருத்தப்படறேம்மா... முதல்வர் நாற்காலி என்ன நமக்கே சொந்தமா? மக்கள் நம்மை வேண்டாம்கிறாங்க; அதை ஏத்துக்குவோம். அதுதானே ஜனநாயகம். அதுக்குத்தானே வெள்ளைக்காரன்கிட்டே நாம போராடினோம். நம்ம தப்பைத் திருத்திக்கிடுவோம். அப்புறம் மக்கள்கிட்ட போ வோம்...' என்றாராம்.
 
அதிகாரத் தரகரோடு, அவர் இல்லத்துப் பெண்கள் பேசியது, "வெறும் இரண்டு பெண்கள் பேசுகிற பேச்சு இது' என்றார். யார் வீட்டுப் பெண்கள், மத்திய அமைச்சர் பதவியில், யாரை நியமிப்பது என்று பேசுகின்றனர்? அவர் பெண் மீது விசாரணை அறிக்கை குற்றம் சுமத்தியது பற்றி, ஒரு பெண் நிருபர் கேள்வி எழுப்பினால், "உனக்கு இதயம் இல்லையா? நீயும் பெண்தானே?' கருணாநிதி அல்லது அவரது பெண்ணைப் பற்றி, இன்னொரு பெண் பேசக் கூடாது என்கிறாரா அவர்? ஒரு நிருபர், இதைக் கேட்காமல், வேறு எதைக் கேட்பார்? 
 
ஈழத் துயரின் உச்சமான, முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு, முன்னும் பின்னும் கூட, முன்னாள் முதல்வர், தன் மேஜை மேல் இருக்கும் குண்டூசிகளைக் கூட நகர்த்த முயற்சிக்கவில்லை. அவமானங்களையும், புறக்கணிப்பையும் பொறுத்துக் கொண்டு, டில்லியில் அவர் இருந்த நாட்களில், பதவிகளைப் பெறப் போராடிக் கொண்டிருந்த அந்தக் கணங்களைக் காட்டிலும், தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவர் பட்டபாடு மிகப் பரிதாபகரமானது.  கடற்கரையில் காலை உணவுக்குப் பின் னும், மதிய உணவுக்கு முன்னும் அவர் மேற்கொண்ட, மூன்றே முக்கால் மணி நேர உண்ணாவிரதம். "ஈழம் கிடைத்து விட்டது...' என்று புறப்பட்டார். 
 
இரட்டை வேடம் போடுவதில் கருணாநிதி வல்லவர். இலங்கைத் தமிழர்களுக்காக அவர் வடித்த கண்ணீரும், எழுதிய கடிதங்களும், கட்டுரைகளும், கவிதைகளும் டன் கணக்கில் சேர்ந்திருக்கும். கடைசியில் நடந்தது என்ன? இலங்கைத் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே, அகதிகளாக, அனாதைகளாக வாழ்கின்றனர். இலங்கை ராணுவத்தினரால், முள்வேலிச் சிறைக்குள் அடைக்கப்பட்டு, கூண்டுப் பறவைகளாக ஜீவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களும் தமிழர்கள் தான்; தமிழ் மொழி பேசுபவர்கள் தான். உலகத் தமிழினத்தின் தலைவராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் கருணாநிதியும், அவரது கட்சியும், அந்த மக்களுக்காக, அவர்களின் விடுதலைக்காக, அவர்கள் சம உரிமை பெறுவதற்காக, இதுவரை என்ன செய்திருக்கிறது? 

See some of Video of Srilankan

Mullivaikal 2009


1200 BODIES COUNTED, HUNDREDS SERIOUSLY INJURED, AERIAL BOMBING SRILANKA ARMY


tamil civilians has been killed by srilanaka goverment








No comments:

Post a Comment