Monday, 13 June 2011

ஈழத் தமிழர் பிரச்னையில் என் கண்கள் பனித்தது; இதயம் அழுதது


ஈழத் தமிழர் பிரச்னையில் நான் எடுத்த முயற்சிகளை எல்லாம் கேலிக்கூத்து, கபட நாடகம் என கீழ்த்தர விமர்சனம் செய்கின்றனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக, காலை 6 மணிக்கெல்லாம் வீட்டாரிடம் சொல்லாமல், அண்ணாதுரை நினைவிடத்திற்கு சென்றுஉண்ணாவிரதம் தொடங்கினேன். ஆனால், காலை சிற்றுண்டியைவீட்டில் முடித்து விட்டு, தலைமைச் செயலகம் செல்லும் வழியில்உண்ணாவிரதம் இருக்கச் சென்றேன் என, முதல்வர் கூறுகிறார். நான் உண்ணாவிரதம் இருந்தால், "கேலிக் கூத்து'; அவர் உண்ணாவிரதம் இருந்தால் அது, "அன்னா ஹசாரே' நடத்தும் உண்ணாவிரதம் போன்றதா?

அதை செய்தேன் இதை செய்தேன் என்று சொல்லும் நீர், கடந்த இந்து வருடத்தில் இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தீர்கள், அந்தம்மா சொன்னது போல காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உண்ணாவிரதம் இருபதாக நாடகம் ஆடியதுதான் ஆக்க பூர்வமான நடவடிகையா?, இதை தமிழன் மட்டும் அல்ல உலகில் வாழும் அத்தனை மனிதர்களும் தினமும் கடைபிடிகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் ராசினாமா என்று உம்மிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்ததுதான் ஆக்க பூர்வமான நடவடிகையா?, அதை பாராளுமன்ற சபாநாயகரிடம் கொடுக்காதது ஏன்?, தமிழர்களுக்காக நீ வெறும் கடிதம் மட்டுமே எழுதினீர், ஆனால் உண்மைகள் கொள்ளை அடித்து கைது செய்யபட்டவுடம் குடும்பத்தோடு டெல்லி சென்று கண்ணீர் விட்டு கபட நாடகம் அடினீர்கள். ஆட்சிக்கு வந்து ஐந்து நாளிலேயே இலங்கைக்கு எதிராக சட்ட மன்றத்தில் இரண்டு தீர்மானம் நிறைவேற்றி இருக்கார் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள். ஆனால் தமிழ் தமிழ் என்று சொன்ன நீர், கடந்த ஐந்து வருடம் ஆட்சியில் இருந்தும், முக்கியமாக பிரச்சனை உச்சகட்டத்தில் இருக்கும் போது ஆட்சியில் இருந்தும் சட்ட மன்றத்தில் இலங்கை மற்றும் அதற்கு ஆதரவாக செயல் பட்ட காங்கிரஸ் ஐ கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன், ஜெயலலிதா அவர்கள் முன்பு என்ன பேசினார் என்பது இப்போதைக்கு தேவை இல்லாதது. ஆனால் ஆக்கபூர்வமாக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய அவரே உண்மையான தமிழ் இன பாதுகாவலர்.

ஜெயலலிதா கபட நாடகம் ஆடவில்லை. அவர் விடுதலை புலிகளுக்கு எதிரானவர், ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரானவர் இல்லை. தமிழ் மக்களுக்காக சமஷ்டி அரசியல் முறையையே விரும்புகிறார். இதனை ஜெயலலிதா பல முறை உறுதிப்படுத்தியுள்ளார். கருணாநிதியோ இந்திய அரசின் கொள்கைக்கு முரண்பாடாக, அதுவும் முன்னை நாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படு கொலை செய்யப்பட்டதை அறிந்தும், புலி இயக்கத்தைச் சேர்ந்த தமிழ் செல்வன் கொலை செய்யப்பட்டமைக்கு இரங்கல் கவிதை எழுதி உள்ளார். புலிகள் இயக்கம் வேறு தமிழ் மக்கள் வேறு என்பதை கருணாநிதி மறந்து விட்டார் போலும். போதாக்குறைக்கு கருணாநிதி தமிழ் நாட்டு கோமாளி என்ற பட்டத்தையும் இலங்கை ராணுவ தளபதிகளிடம் இருந்து பெற்றும் இருந்தார். அதுமட்டுமன்றி தமிழ் நாடில் இருந்து அகதிகளுக்கென்று அனுப்பபட்ட பொருள்கள் இலங்கை அரசினால் உதாசீனபடுதப்பட்டன. அப்படி இருந்தும் ராஜபக்சேவின் அழைப்புக்கு இணங்கி கருணாநிதி தனது மகள் உள்ளிட்ட ஒரு குழுவையும் அனுப்பி, அதன் பின்னர் தமிழ் நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே. இதற்கு எதிர்மாறாக ஜெயலலிதா ஆக்கபூர்வமான செயலினால் மத்திய அரசின் ஊடாக அழுத்தங்களை பிரயோகிக்கின்றார். இது கபட நாடகம் அல்லவே.. . .

No comments:

Post a Comment