Sunday, 26 June 2011

இன்று அரசியல் சாக்கடையாகி, சந்தைக்கடைச் சரக்காகி, மலிவு வியாபாரத்தலமாகி விட்டது

நாடு சுதந்திரம் பெற்று, 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஜனநாயக வேர் சரியாக ஊன்றவில்லை என்ற, ஐயப்பாட்டையே எழுப்புகிறது.பிராந்தியக் கட்சிகள், அந்தந்த மாநிலத்தில், தேசியக் கட்சிகளை விட வலிமையுடையது போன்ற தோற்றத்தை, உருவாக்கிக் கொண்டுள்ளன. அவைகளின் நிலைப்பாடுகள், பெரும்பான்மையான மக்களின் மாறுபட்ட மனோபாவம் போன்றவை.
 
 மாநிலக் கட்சிகளின் பரிணாம வளர்ச்சி, இனம், ஜாதி அடிப்படையில், இன்று பல்கிப் பெருகி, லெட்டர் பேடு கட்சிகளாகி, மக்களுக்குத் தொண்டாற்றுவதை விட, அவர்களைத் துண்டாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
 
ஆங்கிலேயே ஆட்சியரால் விளைந்த ஒரே நன்மை, இந்தியா இரண்டு பட்டாலும், ஒருங்கிணைந்த இந்தியாவாக, ஒரு நாடு உருவானது தான். காந்தி,நேரு, படேல், காமராஜர் போன்ற, நாட்டு விடுதலைக்காகப் போராடிய பெரும் தலைவர்கள் எல்லாம், அரசியலில் சம தர்மத்தைக் கடைபிடித்து, இந்த நாட்டிற்குச் சுதந்திரமும் வாங்கிக் கொடுத்து, மக்களை, மக்களே ஆளும் ஜனநாயக அமைப்பையும் கொண்டு வந்தனர். 

ஆரம்பத்தில், பெருமக்களைப் பார்த்து மக்கள் ஓட்டுப் போட்டனர். போகப் போக, மொழிவாரி மற்றும் பிராந்திய உணர்வுகளைத் தூண்டிய, மாநிலக் கட்சிகளின் பிடியில் சிக்கினர். அதன்பின், மலிவான வாக்குறுதிகளுக்கும், கையூட்டுகளுக்கும் அடிமையாகி, தற்போதைய நிலையை நம் ஜனநாயகம் அடைந்துள்ளது. எனினும், நம் பாரம்பரிய கலாசாரம், வாழ்க்கை முறை, எந்த துன்பம் ஏற்படினும், "நாம் செய்த பாவம், நாம் அனுபவிக்கிறோம்.

No comments:

Post a Comment