Wednesday, 29 June 2011

தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசிடமிருந்து நிர்ப்பந்தம் ஏதும் வரவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே உலகமகாப் பொய்ச் செய்தியை நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.   இன்றைக்கு மத்திய அரசு சார்பில் பிரதமரும், முன்னாள் மற்றும் இன்னாள் வெளியுறவு அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகிய தலைவர்களும் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலாளர் உள்பட பல் வேறு உயர்மட்ட இந்திய அதிகாரிகளும் அதிபர் ராஜபக்சேவை பலமுறை நேரில் சந்தித்து இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்த நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் உலகமே அறிந்தவை தான்.

1 comment:

  1. ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க காங்கிரஸ் தயாரா? அப்போது தெரியும் ராஜபக்சே பொய்யரா அல்லது காங்கிரஸ்காரன் பொய்யர்களா என்று.

    ReplyDelete