மூன்றாவது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் குறைந்தது தயாளு அம்மாளின் பெயர் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம். தயாநிதி உள்ளே செல்லுவது நூறு சதவிகிதம் உறுதி. ஒரு மனிதன் தன் வாழ்நாளை மகிழ்ச்சியாக ஆடம்பரமாக கழிக்க இரண்டு கோடி ரூபாய் இருந்தாலே போதுமானது, ஆனால் இவர்கள் 1.76 லட்சம் கோடிகளை வைத்து என்ன செய்வார்கள்?
இலங்கையில் கொத்து கொத்தாக தமிழ் மக்கள் கொள்ளப்பட்ட போது, மனித சங்கிலி, பந்த், தந்தி, இரண்டு மணி நேர உண்ணா விரதம், ராஜினாமா நாடகம் என்று பலவிதமான கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றிய மஞ்ச துண்டுக்கு கடவுள் நல்ல பாடத்தை கற்பித்து விட்டார். இலங்கையில் நம் மக்கள் செத்து மடியும் போது வராத கண்ணீர், மகளை கைது செய்த பிறகு அருவி போல கொட்டுகிறது.. இது தான் சுயநலம்.
ஆனால் இன்றோ, கனிமொழிக்கு இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்கிறார், ஜாமீன் மறுக்கப்பட்டது என்றவுடன் காற்றாக பறந்து டெல்லி சென்று அழுகிறார். இந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 முறை டெல்லி சென்றிருப்பார், ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் (குடும்ப உறுபினர்களுக்கு பதவி வாங்குவதை தவிர்த்து) ஒரு முறையாவது தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு டெல்லி சென்றாரா?
எண்பது அகவை மூதாட்டி படுத்த படுக்கையாய் தமிழ்நாடு வருகிறார். விமான நிலையத்தில் வைத்தே அரக்கர்கள் அவரைத் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். அப்புறம் உங்களை வீரமணி, சுப வீ சந்தித்து பார்வதி அம்மா சார்பாகப் பேசுகிறார்கள். "உங்களுக்குத் தெரியாது அந்த அம்மா வந்தால் அவரை வைத்து இந்த வைகோவும் நெடுமாறனும் அரசியல் பண்ணுவாங்கள்" என்கிறார். அப்புறம் அந்த அம்மாவை எனக்கு ஒரு மனு கொடுக்கச் சொல்லு கவனிக்கிறேன் என்கிறார். மனு வந்தது. அந்த மூதாட்டி வருவதற்கு ஏகப்பட்ட நிபந்தனைகள். "நாங்கள் சொல்லும் மருத்துவமனையில் நாங்கள் சொல்லும் மருத்துவர்களிடம்தான் வைத்தியம் செய்ய வேண்டும். யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டாது" என்றுநிபந்தனைகள் போடுகிறார். அந்தத் தாய் "அந்த அய்யாவுக்கு என்மீது என்ன கோபமோ தெரியலை. இந்த நிபந்தனைகளை ஏற்று நான் தமிழ்நாடு வர விரும்பவில்லை" என கண்ணீரோடு சொல்லிவிட்டு தனது சொந்த ஊர் சென்று கொஞ்ச நாள் மருத்துவமனையில் கிடந்து மறைந்து போகிறார். அந்த எண்பது அகவைத் தாய் விட்ட கண்ணீர்தான் கருணாநிதி குடும்பத்தை அரமாக இன்று அறுக்கிறது! அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். ஊழ்வினை உருத்தி வந்து ஊட்டும் என்று பொருளோடுதான் இளங்கோ அடிகள் சொன்னார்கள்.
No comments:
Post a Comment