கருப்பு பணம் வைத்திருபவர்கள் தாமே முன்வந்து , நாட்டு மக்களுக்கு உதவிகள் செய்தால் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மற்றும் இவ்வளவு பணத்தினை வைத்திருந்து இவர்கள் என்ன செய்ய போகிறார்கள். மேலும் ச்விஸ் வங்கி மட்டுமல்லாது உள்நாட்டிலேயே தமது படுக்கைகடியிலேயே வைத்திருப்போர் பலர் உள்ளனர். அவர்களும் நடுத்தர மற்றும் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உதவிகள் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். இவளவு பணமும் ஒரு காலக்கட்டதிருக்கு பிறகு அவர்களும் உபயோகபடுதாமல், பிறர்க்கும் உபயோகமில்லாமல் வீணாக போகும் நிலையும் உள்ளது. அதற்கு பதிலாக தேவை இருபவர்களுக்கு உதவிகள் செய்தால் புணியமாக இருக்கும். இது கருப்புப்பணம் வைத்திருக்கும் ஒவ்வொரு இந்தியரும் சுயமாக சிந்தனை செய்தால் கோடிகணக்கான இதயங்கள் வாழ்த்தும். எவ்வளவோ பல நிறுவனங்கள் பண பற்றகுரையினால் ஆட்கள் தேவை இருந்தும் ஆள் குறைப்பு செய்து இருக்கும் ஒரு சிலரிடமே அத்தனை வேலைஎயும் சுமத்தி பிழிந்து எடுகின்றனர். அவர்களுக்கு உதவினால் கூட நிறைய பேருக்கு வேலை வைப்பும் கிடைக்கும் அதே சமயம் வேலை பளுவும் குறையும். வேலைகளும் நல்ல தரமாக நடக்கும்.
அந்த கருப்பு பணத்தை கைபற்றி சாலை வசதி , பொது சுகாதாரம் , மின்சாரம் , பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற வற்றில் முதலீடு செய்யலாம் . எல்லா கிராமங்களுக்கும் ,நகரங்களுக்கும் பயன்படுத்தலாம் . விவசாயத்திற்கு முன் உரிமை அளிக்கலாம் . எந்த விவசாயியையும் தற்கொலை செய்யாமல் தடுக்கலாம் !
அந்த கறுப்பு பணத்தில் 50% இந்தியாவுக்கு வந்தாலே போதும். முழுதாக 100% பணம் கிடைக்க வாய்ப்பு கம்மி. தொலைந்த இந்திய வாழ்கை தரம், பொருளாதாரம் - அந்த வெளிநாட்டின் செழிப்புக்கு காரணம். இந்திய கறுப்பு பணம் வைத்திருக்கும் அந்த நாடுகள், அவர்களே வந்து இந்தியாவில் அந்த பணத்தை முதலீடு செய்தால் நம் அரசாங்கம் அதை வரவேற்க்கனும். ஒன்னுமே கிடைக்காமல் போவதற்கு பதிலா, எதாவது கிடைக்குமே. கறுப்பு பண முதலைகள், பணத்தை கொண்டுவர ஒத்துழைப்பு குடித்தால் பொது மனிப்பு குடுத்தால் கூட தப்பு இல்லை, ஆனால் மறுபடியும் அந்த கறுப்பு பணத்தை மறைக்க, பெரிய பருப்பு போல் ப்ளான் செய்தால், தீவிரவாத சட்டத்தின் கீழ் தண்டியுங்கள்.
No comments:
Post a Comment