Thursday, 23 June 2011

எனது கடைசி காலம் வரை போராட்டம் தொடரும்: அன்னா ஹசாரே ஆவேசம்

“”லோக்பால் மசோதா மூலம், அரசுக்கு இணையாக மற்றொரு அமைப்பை உருவாக்கும் எண்ணமில்லை,” என, காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
டில்லியில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:லோக்பால் வரைவு மசோதா குழுவில் இடம்பெற்றுள்ள சமூக பிரதிநிதிகள், “அரசுக்கு இணையான ஒரு அமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றனர்’ என கூறும் அரசு, தேர்தல் கமிஷன் மற்றும் சுப்ரீம் கோர்ட்டையும் இதே கண்ணோட்டத்தில் பார்க்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
ஊழலுக்கு எதிராக சட்டம் கொண்டுவர, மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல், ஆகஸ்ட் 16 முதல் எனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கும். நான் உயிருடன் இருக்கும் வரை, ஊழலுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

உயிருடன் இருக்கும்வரை போராட்டம் தொடரும் என்பது, தோல்விகளை எதிர்நோக்கும் கருத்து. 
வெற்றி பெறும் வரை நாம் உயிருடன் இருக்க வேண்டும், ஊழலுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு உயிரும் வெற்றி கிடைக்கும் வரை வாழும்.

No comments:

Post a Comment