முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். சிறிது நேரம் உண்ணாவிரதம் இருந்துவிட்டு, "இலங்கையில் சண்டை நின்றுவிட்டது' என்றார். மறுநாள், "மழைவிட்டும் தூவானம் விடவில்லை' என்றார். இது எப்படி சாத்தியம்? தி.மு.க., ஆட்சியாளர்களையே சாரும். இலங்கை அரசு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஒரு பகுதியில், எட்டு லட்சம் தமிழர்களை காணவில்லை என்றனர்.அதன்பின், நான்கு லட்சம் பேர் இருந்ததாகவும், அவர்களில், 40 ஆயிரம் பேர், முள்வேலியில் அடைத்து கொன்று குவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மீதி தமிழ் மக்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.
மனிதாபிமானமற்ற முறையில், ஈவு இரக்கமின்றி இலங்கைத் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படுவதற்கு காரணமானவர்களை, போர்க் குற்றவாளிகள் என ஐ.நா., பிரகடனப்படுத்த, மத்திய அரசு வற்புறுத்த வேண்டும். முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே மீண்டும் குடியமர்த்தி, அனைத்து குடியுரிமைகளையும் இலங்கை அரசு வழங்கும் வரை, மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
No comments:
Post a Comment