Saturday, 11 June 2011

டெல்லியில் தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா

தமிழகத்தில் படுதோல்வி அடைய தி.மு.க., காரணம் என காங்., புகார்

பார்ரா....யோகியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வையுங்க. 

கூட்டு கலவானிக மாட்டிகிட்ட இப்டித்தான் ஒருவர் மேல் மற்றொருவர் பலி போட்டு பேசுவாங்க என்று தமிழக மக்களுக்கு நல்லா தெரியும்.நீங்க சொன்னா மட்டும் தமிழ் இனத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகம் இல்லை ன்னு ஆய்டுமா?இப்போ 63 ல 5 வந்ததே மிக பெரிய தவறு.சில தமிழ் அல்லாத மற்ற மொழியினர் அதிகம் இருக்க மாவட்டதுலத்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது..குறிப்பாக கன்னியா குமரி மாவட்டத்தில் மலையாளிகள் அதிக அளவில் இருப்பதும் ஒரு முக்கிய காரணம்.அவர்களுக்கு தமிழ் மீதும் பற்று இல்லை தமிழினம் அழிக்க பட்டதும் தவறு இல்லை.அதனால் தான் தமிழகத்திலேயே அதிகம் படித்தவர்கள் இருப்பதாக பெருமை அடித்துகொள்ளும் மாவட்டத்தில் தமிழின துரோகி சோனியாவின் காங்கிரஸ் 3 இடங்களை கைப்பற்றி உள்ளது.தமிழ் மீதும் தமிழ் இனத்தின் மீதும் பற்று உள்ள எவனும் இனி வரும் காலங்களில் காங்கிரஸ் என்ற தமிழர் விரோத கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.தமிழகத்தில் காங்கிரஸ் என்ற கட்சி இருந்த இடம் தெரியாமல் துடைத்து எரியக்கூடிய காலம் வந்து விட்டது.தமிழின துரோகி சோனியாவின் தலைமையிலான காங்கிரசுக்கு சாவு மணி அடித்து தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டியது ஒவொரு தமிழனின் கடமை ஆகும்.

திமுக வளவளத்தான் பாணியில் ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற மறுக்கின்றது. சுத்தமாய் அவர்களுக்கு "தன்மானம்" என்பதே இல்லாமல் போய்விட்டது. கழுத்தை பிடித்து வெளியே செல் என்றாலும்.."காலில்" விழுந்து கெஞ்சும் நிலைக்கு திமுக செல்ல காரணம்..? அஞ்சா நஞ்சுவை காப்பாற்றவே தவிர வேறு இல்லை. பதவி உள்ளவரை மட்டுமே அஞ்சா நஞ்சுக்கு ஓரளவு பாதுகாப்பு என்பது தெரியும் அல்லவா? கனியின் கைது...ராசாவின் ஜெயில், அடுத்து வரிசை படுத்தி நிற்பதிலே போட்டியாக..தயாநிதியா? அல்லது தயாளுவா? என்று இருப்பதால் காங்கிரசிடம் "செண்டிமெண்டல்" டச் கொடுத்து தேவை இல்லாத விருந்தாளி மாதிரி ஒட்டிகொண்டிருப்பது.

தோல்விக்கு காரணம் காங்கிரஸ் பெரும் தலைகள் மத்திய அரசில் பண்ணிய மிக பெரிய ஊழலே. கம்மொன்வீழ்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழலில் 2g ராஜாவுடன் பங்கு என்று நூறு ஊழல்கள் சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் பிரதமர் ஊழலை நியாயபடுத்தி பேசியது. காங்கிரஸ் மாநாட்டில் ஊழலை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல், அதை ஒரு பொருட்டாக கருதாமல் இருந்தது. இத்தனை அசிங்கத்திற்கு பிறகும், திமுக உங்களோடு கூட்டணி வைத்தது, தன் கையாலே தலையில் மண்ணை அள்ளிபோட்டதை போன்றது.

No comments:

Post a Comment