Sunday, 26 June 2011

தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் கலக்கம்

சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.,வை ஒரு புரட்டு, புரட்டிப்போட்டது போல், அதன் கூட்டணி கட்சிகளையும் பதம் பார்த்துள்ளது. தேர்தல் தோல்வியால், கூட்டணி கட்சித் தலைமைக்கு எதிரான குரல் எழுந்துள்ளதால், தலைவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.தி.மு.க.,வுடன் காங்கிரஸ் - பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் - கொங்குநாடு முன்னேற்றக் கழகம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்த தொகுதிகளைக் காட்டிலும், கூடுதலாக தி.மு.க., வாரி வழங்கியதால், மகிழ்ச்சியோடு தேர்தல் களம் கண்டன. ஆனால், தி.மு.க., அரசின் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, கோபம் காரணமாக, தி.மு.க.,வும், கூட்டணி கட்சிகளும் கடும் தோல்வியை சந்தித்துள்ளன.

தி.மு.க., கூட்டணியின் அடுத்த பிரதான கட்சியாக பா.ம.க.,விற்கும், தேர்தலில் பெரும் தோல்வி கிடைத்தது. இதனால், அன்புமணியை, ராஜ்யசபா எம்.பி.,யாக்கி, டில்லி அனுப்ப வேண்டும் என்ற கனவும் கலைந்து போயுள்ளது. "நாங்கள் இருக்கும் அணிதான் வெற்றி பெறும்' என்ற பா.ம.க.,வின் பெருமைப்பேச்சுக்கும் முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் காவேரி, தன்ராஜ் உள்ளிட்டோர் கட்சித்தலைவர் ஜி.கே.மணிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக எடுத்துவைத்துள்ளனர். அடுத்தகட்டமாக, ராமதாஸ், அன்புமணிக்கு எதிராகவும் அவர்கள் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்த, பா.ம.க., கூடாரம் கலகலத்துப் போயுள்ளது.

வெற்றி தோல்வி அரசியலில் சகஜம்.ஆனால்,இப்போது தி மு காவை பழித்து பேசும் கட்சிகளிடமிருந்து தி மு கா நல்ல பாடத்தை கற்க வேண்டும். ஆனால் தி மு காவும் கற்கவில்லை."உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்கின்றது குறள்.இது அரசியலுக்கும் பொருந்தும்.ஆனால்,இன்று உள்ள நிலைமையை பார்த்து தி மு காவோ "கூடா நட்பு கேடாய் முடியும்" என்கின்றது.காங்கிரஸ் கட்சியும் ப ம கவும் தி மு காவால் தான் தேர்தலில் தோற்றோம் என்று சொல்கின்றன.தோல்வி பற்றி பரஸ்பரம் குற்றம் சுமத்துவதிதான் அணைத்து கட்சிகளின் கவனம் உள்ளது.இது ஆரோக்கியமான அரசியலுக்கு உதாரணம் அல்ல.சம்மந்தப்பட்ட காட்சிகளில் ஒரு கட்சிகூட உள்ளடி வேலை பார்த்து இல்லை என்று சொல்ல முடியாது.பல தொகுதிகளில் தி மு காவின் தோல்விக்கு அந்த அணியில் இருந்த உள்ளடி வேலைகள்தான் காரணம்,மற்றபடி மக்கள் அ தி மு கா அணியை விரும்பி ஓட்டலிக்கவில்லை.

No comments:

Post a Comment