Saturday, 4 June 2011

"கூடா நட்பு கேடாய் முடியும்': கருணாநிதி பிறந்தநாள் செய்தி

""கூடா நட்பு கேடாய் முடியும்' என்ற பொன்மொழியை புரிந்து கொண்டு பணியாற்றுங்கள்,'' என, தொண்டர்களுக்கு, கருணாநிதி அறிவுரை வழங்கினார்.அவரிடம், பிறந்த நாள் அன்று, தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என, பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "சமுதாய எழுச்சிக்காகவும், அரசியல் மறுமலர்ச்சிக்காகவும், தங்களை ஒப்படைத்துக் கொண்ட தோழர்கள், உடன்பிறப்புகள், "கூடா நட்பு கேடாய் முடியும்" என்ற பொன்மொழியை மறந்து விடாமல், பணியாற்ற வேண்டும்' என்றார்.

பொன்மொழி

உள் ஒன்று வைத்து புறமொன்று செய்தால் எல்லா நட்புமே கேடாய் தான் முடியும் ...சேராத இடந்தனில் சேரவேண்டாம் ..வினை வித்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் ...முற்பகல் செயின் பிற்பகல்தானே விளையும்... தன் வினை தன்னை சுடும்... மதியாதார் வாயில் மிதியாதே ...போதுமென்ற மனமே பொன்செய்யும், "சுடலை ஞானம்". பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாது. மருந்து பொன்மொழிகளுக்கு பஞ்சமில்லை. இவைகளை யாரும் கடைபிடிப்பதில்லை ..பிறருக்கு உபதேசம் செய்வது எளிது ...

No comments:

Post a Comment