வங்கி கணக்குகள் மற்றும் இரட்டை வரி ஒப்பந்தங்கள் குறித்த சுவிட்சர்லாந்து சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தெரிய வரும். யார், யார் எவ்வளவு பணத்தைப் போட்டு வைத்துள்ளனர் என்பதும் அம்பலமாகும். இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர்.அன்னிய நாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு, அது நிலுவையில் இருக்கிறது. அதே நேரத்தில், இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் தரப்பிலும், அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றவர்கள் தரப்பிலும் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி, இவர்கள் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
No comments:
Post a Comment