Thursday, 9 June 2011

கருணாநிதி, லஞ்ச ஊழலை தடுக்க 1970ம் ஆண்டே தி.மு.க., சட்டம் இயற்றியது

பொதுவாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச, ஊழல் குற்றத் தடுப்பு சட்டத்தை 1970ம் ஆண்டிலேயே தி.மு.க., கொண்டு வந்தது,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அன்னா ஹசாரே, குரு பாபா ராம்தேவ் போன்றோர், கறுப்புப் பணத்திற்கும், ஊழலுக்கும் எதிராக இன்று போர் தொடுக்கிறார்கள். 1970ல் தி.மு.க., ஆட்சியின் போது, பொதுவாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. 1973ல், சட்டம் இயற்றப்பட்டது. முதல்வர், முன்னாள் முதல்வர், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள், மேயர், துணைமேயர், நகராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் மீதான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சட்டம் வகை செய்தது.

இச்சட்டத்தை ஆரம்ப நிலையிலேயே எம்.ஜி.ஆர்., எதிர்த்தார். ஜெயபிரகாஷ் நாராயணன், அத்வானி போன்றோர் வரவேற்றனர். நாளிதழ்களில், சட்டத்தை வரவேற்று கட்டுரைகள் எழுதப்பட்டன. லஞ்ச, ஊழல் ஒழிப்புக்கு தமிழகம் வழிகாட்டுகிறது என பாராட்டப்பட்டது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment