உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ்வையும், அவரது ஆதரவாளர்களையும், டில்லி போலீசார், கட்டாயப்படுத்தி வெளியேற்றியதோடு, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், பா.ஜ., சார்பில் நேற்று முன்தினம் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்ட, கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து, நடனமாடினார். இந்த காட்சி, "டிவி'யில் ஒளிபரப்பானது.
காங்கிரஸ் பொதுச் செயலர் ஹரிபிரசாத் கூறியதாவது: மகாத்மா காந்தி நினைவிடத்தில், சுஷ்மா சுவராஜ் நடனம் ஆடியுள்ளார். இதன் மூலம், மகாத்மா காந்தியையும், நாடு முழுவதும் உள்ள சுதந்திர போராட்டவீரர்களையும் அவர், அவமதித்துள்ளார். எனவே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து, அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment