Saturday, 4 June 2011

விநாச காலே விபரீத புத்தி ....காங்கிரஸ்

1. வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பதை, தேசிய குற்றம் என அறிவிக்க வேண்டும். (சரி. மொத்தமாய் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ச்விஸ் நாட்டிற்கு சென்று வந்தவர்களின் எண்ணிக்கையே 50000 கூட இருக்காது என்கிறார்கள். அந்த 50000 பேரின் ரெகார்டுகளை பரிசீலிப்பதேன்பது பெரிய vishayamillai. தும்பை விட்டுவிட்டு வாலைபபிடிப்பதால் 80000 பக்கத்துக்கு குற்றப்பத்திரிக்கை தயாரித்து பொழுதை விரயம் செய்யவேண்டியதாகிவிடுகிறது.)

2. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை, தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும். (சட்டத்தை முறையாக பயன் படுத்தினால், அவர்களே பணத்தைப் போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலின் போது கையகப்படுத்தப்பட்ட பல கோடி ரூபாய்களை உரிமை கோரி இன்னும் யாரும் வரவில்லை. என்ன ஒரு அவலம் பாருங்கள் ) 

3. ஊழலில் ஈடுபடுவோருக்கு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்க வேண்டும். (மரண தண்டனை அவசியமில்லை. ) 

4. அன்னா ஹசாரே வலியுறுத்தும் லோக்பால் மசோதாவை சட்டமாக்க வேண்டும். (பிரதமரையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும். இருக்கின்ற MP க்களில் ஒருவர்தான் பிரதமராக முடியும் என்னும் போது, avarukku மட்டும் விதிவிலக்களிப்பதேன்பது சரியல்ல. நரசிம்ம ராவ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தலில், அதிஷ்டவசமாக என்.டி.திவாரி தோற்றுப்போனதால்தான் அவர் பிரதமராகவில்லை. அவர் பிரதமராக வந்திருந்தால், ஆந்திரா கவர்னர் அலுவலகம் நடந்த மாதிரி தான் பிரதமர் அலுவலகம் நடந்தேறியிருக்கும் ) 

5. ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக, விரைவு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும். ( அவசியம் செய்யவேண்டும். கோடை விடுமுறைகள் இல்லாத கோர்ட்டுகளை அமைக்க வேண்டும்) 

6. கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்படுவதை தடுக்கும் வகையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதை வாபஸ் பெற வேண்டும். ( ஒருவருக்கு ஒரு வங்கி கணக்கு தான் அனுமதிக்கப்பட வேண்டும். எல்லோருக்கும் ஒரு அடையாள அட்டையும், கிரெடிட் கார்டும் வழங்கவேண்டும். 1000 ரூபாய்க்கு மேலான அனைத்து பரிமாற்றங்களும் கிரெடிட் கார்டு மூலம் தான் நடைபெறவேண்டும். தேவையானால் அதற்கான கையாக இயந்திரங்களை சிறு சிறு வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் கொடுக்கலாம்) 

7. இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட தொழில் முறை படிப்புகள், இந்திய மொழிகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். (முற்றிலும் தவறு. கல்வி தேசியமயமாக்கப்பட்டு, முடிந்தால் ராணுவத்தின் ஒரு பிரிவாகவே அமல்படுத்தி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை international syllabus அமல் படுத்தி, இங்கிலீஷ் & ஹிந்தி ஐ கட்டாயபாடமாக்கி அனைவருக்கும் 18 வயது வரை கல்வி மற்றும் உடற்பயிற்சிகள், ராணுவப்பயிற்சி ஆகியவற்றை கட்டாயமாக போதிக்க வேண்டும்) 
8. நாட்டில், நிலையான அரசியல் சூழ்நிலை நிலவ வேண்டுமெனில், பிரதமரை, மக்களே நேரடியாக தேர்வு செய்யும் வகையில் தேர்தல் நடத்த வேண்டும். (ஜனாதிபதியையும் நேரடியாக தேர்வு செய்திட்டால் இன்னும் நல்லது) 

9. அனைத்து தரப்பு மக்களும், தங்களின் வருவாய் பற்றிய விவரங்களை கட்டாயமாக தெரிவிக்க, உத்தரவிட வேண்டும். (ஒருவருக்கு ஒரு வங்கிக் கணக்கு..ஒரு பாஸ் புக்.) 

10. வருமான வரி தொடர்பான விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். (அவசியமில்லை. ஊழல் பணம் தோன்றும் இடங்களையும், ஊழல் பணம் இன்வெஸ்ட் செய்யப்படும் இடங்களையும் கண்காணித்து முடக்கினால் போதும்) 

11. உணவுப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, அதிகரிக்க வேண்டும். (ஊழல் பணம் தான் பதுக்களிலும், நிலம் வாங்குவதிலும் ஈடுபடுத்தப்படுகிறது. அதுவே விலை குறைந்த கொள்முதல் விளைக்கும், அதிக விற்பனை விளைக்கும் துணை போகிறது. ) 
12. அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான கூலி நிர்ணயம் செய்யப்பட வேண்டும். (சம்பளம் கூலி இவற்றில் உள்ள அளவு வித்தியாசத்தைக் குறைக்க வேண்டும். ) 

13. விவசாயிகளை கட்டாயப்படுத்தி, நிலம் கையகப்படுத்தும் நடைமுறையை கைவிட வேண்டும். (ஊழல் பணம் பெரிதும் நிலங்களில் தான் முதலீடு செய்யப்படுகிறது. ) 

14. இந்தி மற்றும் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். (ஜாதி, மதம் இவை ஒழிக்கப்பட வேண்டும். இங்கிலீஷ் & ஹிந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும்)

No comments:

Post a Comment