Wednesday, 29 June 2011

பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான ஆள்.

மத்திய அரசுக்கு நெருக்கடி தரும், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான ஆள். அவர்களுக்கு எதிராக, ராகுலை முழு வீச்சில் களம் இறக்கிவிட வேண்டும்' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.ராகுலுக்கு, மக்களிடையே உள்ள செல்வாக்கு, புகழ் ஆகியவற்றின் மூலமாக, அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோரின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம்.பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே ஆகியோருக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான நபர். அவர்களின் போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாடு முழுவதும் ராகுலை தீவிர பிரசாரத்தில் களம் இறக்க வேண்டும்.இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ராம்தேவுக்கு பதிலடி கொடுக்க ராகுல்தான் வரவேண்டும் என்று காங்கிரஸ் காரர்கள் கூறினால், மன்மோகன் திறமையற்றவர் என்றுதானே பொருள். முதலில் அவரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். சரி.  


பிரதம மந்திரியையும் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியையும் லோக்பால் விசாரித்தாலே அப்பதவிகளின் கண்ணியமும் மதிப்பும் குறைந்துவிடும் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இவர்கள் எவ்வளவு கண்ணியத்துடனும் அப்பதவிகளுக்கு மதிப்பு வரும் வகையிலும் நடந்துகொள்ளுகிறார்கள் என்பதை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்.http://ibnlive.in.com/news/keep-pm-higher-judiciary-out-of-lokpal-excji/162837-3.html பின்னர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் இதை கூறுகிரார்கள் என்பதுதான் விளங்கவில்லை. லோக்பால் இவர்களுக்கு எதிராக விசாரித்து குற்றம் நிரூபணமானால் லோக்பாலே தண்டிப்பது என்பது மக்களாட்சித் தத்துவத்திற்கு முரண்பாடானது என்பது சற்று சிந்திக்கவேண்டிய வாதம்தான். மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டவரை மக்கள்தான் (பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகள்) தண்டிக்கவேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, லோக்பால் குற்றம் உண்மை என்பதைக் கண்டறிந்து அந்த உண்மைகளைப் பாராளுமன்றத்தின் முன் சமர்ப்பித்து அவர்களுக்குத் தண்டனை கோரலாம். பாராளுமன்றம் தண்டிக்கவில்லை என்றால் ஜனாதிபதியிடம் மேல் முறையீடு செய்யலாம். அதுவும் நடக்கவில்லை என்றால் மக்களின் தீர்ப்புக்கு (Referendum) விடலாம். Anti Corruption Law பிரகாரம் அவரே அவரைத் தண்டித்துக்கொள்வார் என்று நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம். பாசாங்குக்காரணங்களைக்கூறி லோக்பலை வலுவிழக்கச் செய்வதும் இல்லதாக்கச் செய்வதும் தேசத் துரோகம். 
லோக்பால் சட்டம் என்ற பெயரில் ஒரு உப்பு சப்பு இல்லாத சட்டத்தை உருவாக்குவதற்கே !! மக்கள் அனைவரும் ஜன லோக்பால் சட்டத்தை படிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்பொழுது தான் அரசாங்கம் கொண்டு வரும் லோக்பால் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நான் அறிய முடியும். நீங்கள் சென்னையில் இருப்பவராக இருந்தால் 7358251781 / 82 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு INDIA AGAINST CORRUPTION என்ற இயக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ளலாம். www.iacchennai.org என்ற இணைய தளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். நன்றி !!


No comments:

Post a Comment