திமுகவினால்தான் தோற்றோம்: அன்புமணி ராமதாஸ் காட்டம்: விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, 2ஜி அலைக்கற்றை என்று பல்வேறு காரணங்கள் உள்ளன. 2ஜி அலைக்கற்றை பிரச்னையை திமுக அமைச்சர்களே சொல்லுகிறார்கள். அதுதான் என் எண்ணமும். இப்படிப்பட்ட காரணத்தால்தான் மக்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.இந்தத் தேர்தலைப் பொருத்தவரை பாமகவுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. திமுகவுக்கு எதிரான வாக்குகள்தான். அதற்கும் மேலாக சொல்லப்போனால் அதிமுகவுக்குச் சாதகமான வாக்குகளும் கிடையாது. ஆளும் கட்சிக்கு (திமுக) எதிரான வாக்குகள்தான்.
தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் காரணம் : நெல்லை கூட்டத்தில் தி.மு.க., கடும் தாக்கு: சட்டசபை தேர்தலில் தோல்விக்கு காரணம் காங்கிரஸ்தான். அந்த கட்சியை முன்பே கழற்றிவிட்டிருக்கவேண்டும்,'' என நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில், 9 தொகுதிகளில் தி.மு.க., அணி தோல்வியுற்றது.
வாகை முத்தழகன்: ஜாதியினருக்குத்தான் கட்சியில் அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது. இளைஞர் அணி தளபதி என கூறும் ஸ்டாலினுக்கு 60 வயது ஆகிவிட்டது. கண் தெரியாதவர், காது கேட்காதவர்களையெல்லாம் இளைஞர் அணியில் வைத்திருந்தால் கட்சி எப்படி வளரும். சிறையில் இருக்கும் கனிமொழிதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர். நாம் அந்த கட்சியுடன் கூட்டணியில் தொடர்வதா இல்லையா என்பதை கட்சித் தலைமை முடிவெடுக்கும். இப்போது எடுக்கிற முடிவை கொஞ்சம் முன்பே எடுத்து காங்கிரசை கழற்றிவிட்டிருக்கலாம். இளைஞர் அணி, புண்ணாக்கு அணி என ஒன்றும் தெரியாதவர்களெல்லாம் தி.மு.க.,விற்கு அறிவுரை சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment