யோகாசன நிபுணர் பாபா ராம்தேவ், இந்தியில் தான் பேசுவார். அதுவும், சுத்தமான இந்தி. மொழி தெரியாமல் அவருடன் பேசினால் பிரச்னை தான். ராம்தேவ் பிரச்னையை சமாளிக்க, பிரதமர் தலைமையில் அரசியல் ஆய்வுக்குழு கூடியது. இதில் கலந்து கொண்டவர்கள், பிரணாப் முகர்ஜி, சரத் பவார், தி.மு.க.,விலிருந்து ஒரு அமைச்சர், ஏ.கே.அந்தோணி, உள்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்தி தெரியாது. ஓரிரண்டு அமைச்சர்கள் இந்தி பேசினாலும், எழுத படிக்க தெரியாது. பிரதமர் மன்மோகன் சிங், உருது மொழியில் நிபுணர். ஆனால், இந்தி அவ்வளவாக தெரியாது. இந்தி உரையாற்றும்போது கூட, உருதுவில் எழுதித்தான் படிப்பார். இப்படி, இந்தி தெரியாதவர்கள், ராம்தேவை எப்படி சமாளிப்பது என்பது குறித்து, அலசி ஆராய்ந்துள்ளனர். "என்ன செய்வது, அமைச்சரவை அரசியல் குழு அங்கத்தினர்களுக்கு இந்தி சரளமாக எழுத, படிக்க தெரியாது'
No comments:
Post a Comment