சி.பி.ஐ.,யை பொறுத்தவரை, ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதும், அந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி, அது தொடர்பான தன் கருத்தை விளக்கி, இயக்குனருக்கு அறிக்கை அளிப்பார். சி.பி.ஐ., வழக்குகளில், இது முக்கியமான ஆதாரமாக கருதப்படுகிறது. இந்த தகவல்கள் பகிரங்கபடுத்தப்பட்டால், விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, பல்வேறு பிரச்னைகளும் ஏற்படும். இதன் காரணமாகவே, தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கும்படி வலியுறுத்துகிறோம். இவ்வாறு தாரிணி கூறினார். மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, சி.பி.ஐ.,யால் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின் வெளிப்படையான தன்மை குறித்து, கேள்வியை எழுப்பியுள்ளது.
My Opinion:
குற்றம் நடை முறை முடிந்தவுடன் தகவல்களை அளிக்கலாமே. ஆனால் விசாரணை முடிந்து கோர்ட் தீர்ப்பு தந்த பிறகு தகவல் பெரும் உரிமை பொது மக்களுக்கு இருக்க வேண்டும்.. இது முற்றிலும் சரியே ! ஆனால் ஒரு வழக்கின் விசாரணை முடிந்து அவ்வழக்கின் ரிப்போர்ட் அரசிடமோ அல்லது நீதி மன்றதிடமோ சமர்பித்தவுடன். மக்களுக்கு தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும்.
தி மு க உயர் மட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட சிபிஐ க்கு எதிரான தீர்மானமும்,தற்பொழுது மதிய அரசின் தகவல் உரிமை சட்டத்திலிருந்து சி.பி.ஐ.,க்கு விலக்கு என்ற அறிவிப்பும் மிகபெரிய சந்தேகத்தை ஏற்ப்படுத்துகிறது.நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுவுற மாதிரி அழுவு!என்ற நாடகத்தை தமிழர் விரோதி காங்கிரசும் தமிழின துரோகி தி மு க வும் செயல் படுத்துவதாக தோன்றுகிறது.ஊழலில் ஊறிய தமிழின விரோதி சோனியாவும் அவரின் காங்கிரஸ் கட்சியும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி மு க வுக்கு உதவாமல் இருந்தது ஆச்சர்யம் தான்.அதற்க்கு உச்ச நீதி மன்றத்தின் நேரடி தலையீடு,மக்களின் விழிப்புணர்வு போன்றவை தான் முக்கிய காரணம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா, கனிமொழி கைது செய்ய பட்ட காரணத்தை வைத்து காங்கிரஸ் ஊழலுக்கு எதிராக செயல் படுவதாகவும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசுக்கு பங்கு இல்லை எனவும் ஒப்புகொள்ள முடியாது.காங்கிரசின் உண்மை முகம் அனைவரும் அறிந்ததே.தற்பொழுது தி மு க வுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் காங்கிரசை காட்டி கொடுத்து விடக்கூடும் என்ற பயமும்,ராஜா ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க நேர்ந்தால் தானும் மாட்டி கொள்வோம் என்ற பயமும் அரக்கி சோனியாவுக்கு இல்லாமல் இல்லை.ஊழலுக்கு எதிராக மக்களை திரட்டி போராடியவர்களை அடக்கிய இத்தாலி சோனியா சிபிஐ விசாரணையை முடக்க எடுத்த நடவடிக்கைதான் இது. இனி ஸ்பெக்ட்ரம் என்ற மாபெரும் ஊழல்,உலகமாக ஊழல் சிறிது சிறிதாக சிதறடிக்க படும்.உள்ளே சென்றவர்கள் வெளியே வந்து நாங்கள் குற்றமற்றவர்கள் என கூப்பாடு போடுவார்கள் . இந்திய ஜனநாயகம் புதை குழியில் புதைக்கப்படும். இந்திய மக்கள் மீண்டும் ஒருமுறை முட்டாள்கள் என நிரூபிக்க படுவார்கள்.இதற்க்கு ஒரே தீர்வு காந்தியவாதி அன்ன ஹசாரே தலைமையிலான இரண்டாம் சுதந்திர போராட்டம் மட்டுமே.
No comments:
Post a Comment