Saturday, 18 June 2011

குஜராத் மாநிலம்

அந்நிய முதலீடு குஜராத்தில் 50000 கோடியாக இருக்கிறது. தமிழகத்தை விட 10 மடங்கு அதிகம். ஆக, மின் தேவையும் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. அங்கு என்ன நாள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? இல்லையே. 24 மணிநேர, மும்முனை மின்சாரம் வழங்க கூடிய ஒரே மாநிலமாக எப்படி உருவெடுத்தது? பள்ளத்திலிருந்து மேட்டிற்கு கொண்டு செல்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று தமிழக அரசாங்க வல்லுநர் குழுவால் சொல்லப்பட்ட சிறுவாணி திட்டம், இன்றைக்கு கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக மாறியது எப்படி? விவசாயத்திற்கு குஜராத்தை நாம் முன்மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும் என்று அப்துல் கலாம் கூற காரணம் என்ன? ஒரு லட்சத்திற்கும் அதிகமான, கட்டி முடித்து பயன் பாட்டிற்கு வந்துள்ள சிறு, குறு நீர் தடுப்பணைகள் மற்றும் அதன் மூலமான மின் உற்பத்திதானே...

நரேந்திர மோடி பெருமையோடு சொன்னாரே.. எப்படி? வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் தொழில் முதலீடுகளை தமிழகத்தில் வந்து கவர்ந்து கொண்டு போனது மட்டுமில்லாமல், நான் உங்கள் முதல்வரை போல அமைச்சர் கூட்டத்துடன் வரவில்லை. அதிகாரிகளின் கூட்டத்தோடு வந்திருக்கிறேன்..உங்களுடைய தேவைகளை இங்கேயே நிறைவேற்றுகிறேன் என்று நக்கலும் செய்தாரே.. எப்படி? திட்டமிடல். அது ஒன்று மட்டுமே முன்னேற்றத்தை கொடுக்கும்.

No comments:

Post a Comment