தன் மகள் கனிமொழியை சிறையில் பார்க்க, இரண்டாவது முறையாக, டில்லி வந்திருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. முதன் முறை வந்த போது, குலாம் நபி ஆசாத் உட்பட, பல காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதி தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து அவரைச் சந்தித்தனர். ஆனால், இந்த முறை கருணாநிதியை, காங்கிரஸ் கண்டுகொள்ளவேயில்லை.
சில காங்கிரசார், "தி.மு.க., - காங்., கூட்டணி குறித்து, உறுதியாக நீங்கள் கருணாநிதியிடம் பேசுவது நல்லது' என, பிரணாப்பிடம் சொன்னார்களாம். அதற்கு பிரணாப், "தமிழக விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன். என்னை விட்டுவிடுங்கள்' என, கருணாநிதியைச் சந்திக்க மறுத்துவிட்டார்.
மேலும், கறுப்பு பண விவகாரம் மற்றும் ஊழல் தடுப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், திமுகவுடனான கூட்டணி நன்றாகவே உள்ளது என்றும் பதிலளித்தார் மன்மோகன் சிங்.
No comments:
Post a Comment