""பாபா ராம்தேவின் உண்ணாவிரதப் போராட்டம், ஆடம்பரமான ஐந்து நட்சத்திர சத்தியாகிரகப் போராட்டமாக உள்ளது. வி.எச்.பி., - ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் இந்த போராட்டம் நடக்கிறது,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கறுப்பு பணத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் ராம்தேவ், மொரீஷியசில் எதற்கு ஆசிரமம் அமைத்துள்ளார். இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.
உங்களிடம் ஆட்சி அதிகாரம் இருக்கிறது. அவர் மொரீசியசில் ஆஸ்ரமம் வைத்திருந்தால், அதன் மூலம் ஏதேனும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், இதற்குள் நீங்கள் நடவடிக்கையே எடுத்து முடித்திருக்க வேண்டும், சும்மா பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது என்பதற்குத்தான் இந்த போராட்டமே. அயல்நாட்டில் எவ்வளவு பணம் உள்ளது என்று நீங்கள் ராம்தேவைப் பார்த்துக் கேட்டுக்கொண்டே காலத்தைக் கடத்தினால், விக்கிலீக்ஸ் வெளியிட்டுவிடும்.
தன்னுடைய இந்திய வேள்விக்கான போராட்டதிற்கு வந்திருக்கும் ஆயிரகணக்கான சுதந்திர போராட பங்காளர்களுக்கு அவர்களுக்கு தேவையான அடிப்படையான வைகளை செய்து கொடுத்திருப்பதை குறி வைத்து தாக்கும் இந்த சிறு மதியாலனை என்னவென்று உரைப்பது? காங்கிரஸ் கட்சியை போல பொது மக்களை கடும் வெயிலில் கருக விடுவதா?
உலக அளவில் மிகபெரிய ஊழல் செய்த ராஜா ஒங்க கூட்டணில இருக்கார், அமெரிக்க டைம்ஸ் பத்திரிகை சொல்லுது. அடிக்கிற வெயிலில காத்து கூட இல்லாமல் மக்கள் சாக வேண்டும் என்பதுதான் காங்கிரசின் கொள்கையா? சுதந்திரத்திற்கு முன்பே காந்தி சத்தியா கிரக போராட்டம் நடத்திய போது கையில் விசிறி வைத்திருந்தார். அன்று ஏ.சி. கிடையாது. இருந்திருந்தால் அவர் இல்லையென்றாலும், நேரு வைத்திருந்திருப்பார். நேர விரையத்தை தடுக்க விமானப் பயணம் மேற்கொள்ளுகிறார்கள். உங்களுக்கு என்ன எரியறது.
பாபா ஐந்து நட்சத்திர உண்ணாவிரதம் இருந்தால் என்ன, ஜெட் விமானத்தில் பறந்தால் என்ன, அவருடைய கோரிக்கை நாட்டிற்கு தேவையான ஒன்று. நீங்கள் இது வரையில் ஏதாவதொரு ஊழல் புகாரில் சிக்கியவருக்கு தண்டனை கொடுத்துலீர்களா? அப்சல் குரு, தூக்கிற்கே இன்னும் உங்களால் ஒன்னும் செய்ய முடியவில்லை.
நித்தமும் ஒரு லட்ச ரூபாயை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அரசு செலவில் "வாடகையாய்" கொடுத்த காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கிருஷ்ணா, போன்று அல்ல இவர்கள்.
அதற்கும் மேலே ஒற்றுமையாய் உள்ள "மதங்களை" பிரித்தாளும் கேவலத்தை அரங்கேற்ற முயற்சிக்கின்றது.! எங்கேயோ இருந்து "திடீர்" என்று இந்தியாவிற்கு வந்த பெண்ணை..அனுதாபத்தை பெற்ற நேரத்தை பயன்படுத்தி..அவரை தலைமை தாங்க சொல்லி கெஞ்சி..அவரை வைத்து அரசியல் "பிழைப்பை" நடத்த துணிந்த இவர் போன்றோரின் பேச்சுகளுக்கு "முக்கியத்துவத்தை" ஊடகங்கள் "தவிர்ப்பதே" நல்லது. யார் மூலமாவது நமது நாடு நல்ல நிலைக்கு வாராதா என்றுதான் ஒவ்வோர் இந்தியனும் துடிக்கின்றான்..இப்போது ராம்தேவ் மற்றும் அன்னா ஹசாரே போன்றோரே கலங்கரை விளக்காய் தெரிகின்றனர். திக்விஜய்சிங் போன்றோர் எல்லாம் இருளில் முனகும் கோட்டான்கள்.
No comments:
Post a Comment