நாத்திகம், பகுத்தறிவு என்று வெளியே பேசிக்கொண்டு மஞ்சள் துண்டு அணிவார். சமீப காலமாக அவர் கலந்து கொள்ளும் மேடை அலங்காரங்கள் கூட மஞ்சள் நிறம் தான். பாவம் தொண்டர்கள்.
அன்று அராஜகமாகத் தடுத்த பாவம்தான் கண்டோரும், கேட்டோரும் நகைக்க, கருணாவின் உறவுகள் இன்று அதே தெய்வங்களின் கோயில், கோயிலாக அலைந்து, எதைத் தின்றால் பித்தம் ( 2G பித்தம் ) தெளியும் என்று நாயாய், பேயாய் அலையும் நிலை வந்துள்ளது ?
உபதேசம் ஊருக்கு மட்டும்தான், அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் கிடையாது, உதாரணமாக
- ஸ்டாலின் மகளும் மருமகனும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார்கள், கருணாவின் மணவி சமீபத்தில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் எள் விளக்கு ஏற்றி பரிகார பூஜை செய்தார், மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னால் பணம் கொடுபதற்காக வந்த மறைந்த சாய்பாபாவுக்கு, கருணாவின் மனைவி பாத பூஜை செய்தார். ஆனால் இதை எல்லாம் யாரும் கேள்வி கேட்க கூடாது. உபதேசம் எல்லாம் முட்டாள் மக்களுக்கு மட்டும்தான் தனக்கும் தன குடும்பத்துக்கும் கிடையவே கிடையாது,
- இந்தியை எதிர்போம் ஆனால் என் மகன்கள் பேரன்கள் கொள்ளு பேரன்கள் வித்தியலயாவில் படிப்பதை படித்ததை பற்றி யாரும் கேட்ககூடாது,
- உலக தமிழின தலைவர் என்பது எனக்கு நானே கொடுத்த பட்டம். ஆனால் ஈழ தமிழர்களை காப்பாற்ற மாட்டோம். இதையும் யாரும் கேட்ககூடாது, உண்ணாவிரதம் என்று நாடகம் ஆடுவோம் ஆனால் யாரும் கேட்க கூடாது,
- செந்தமிழ் மாநாடு நடத்துவோம், மாநாட்டு மேடையில் தமிழ் அறிஞர்களுக்கு இடம் கொடுக்காமல் எனது குடும்ப கவிஞர்களை தான் (கவிங்கர் கனிமொழி) அமர செய்வோம்,
- ஏழைகளின் நிலங்களை அபகரிப்போம் ஆனால் எழைகளின் காவலன் என்றுதான் என்னை அழைக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொல்வோம் ஆனால் ஊழலுக்கு ஊற்றுகண்ணாக நாங்கள் தான் இருப்போம், மேலும் நாடாளு மன்ற போது கணக்கு குழுவை செயல் படாமல் செய்வோம், லோக்பாலில் பிரதமரை சேர்க்க வேண்டும் என்று சொல்வோம் ஆனால் இந்திய நாட்டின் மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதை பிரதமர் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்ல மாட்டோம்,
- வருடபிறப்பை மாற்றுவோம் ஆனால் எங்கள் கொள்கைகளை மாற்ற மாட்டோம், மின்சார பிரச்சனைக்கு தீர்வு காண முன்வரமாட்டோம் ஆனால் அதை தீர்க்க நடவடிக்கை எடுபவர்களை எதிர்த்து அறிக்கை விடுவோம், கவிதையே எழுத தெரியாத எனது மகளை கவிஞர் என்று அழைப்போம், அதற்கு உண்மையான கவிஞர்களை அழைத்து பாராட்டு விழா நடத்துவோம், மாற்றம் வேண்டும் என்று சொன்ன மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற சொல்லி புகார் கொடுப்போம், மாற்றம் வந்த பிறகு நாங்கள் மாற்றம் வேண்டும் என்று குரல் கொடுப்போம்.
No comments:
Post a Comment