Thursday, 9 June 2011

ஊழலே ஊழலை பற்றி பேசுகிறது.

ஊழலைக் குறித்து யார் பேசுவது என்கிற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. தமிழகத்தில் ஊழலுக்கு வித்திட்டதே இந்த கருணாநிதிதான். திருவாரூரிலிருந்து கட்டிய துணியுடன் சென்னை வந்து இன்று ஆசிய பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்தது ஊழலே செய்யாமல் உழைத்துச் சேர்த்ததுதான் என்று கூற முடியுமா ?

எம்ஜிஆர் ஒழிச்ச சட்ட மேலவையை திரும்ப கொண்டுவரதுல இருபது வருசமா பெரும் முனைப்புடன் செயல் படும் நீங்க 1996 -2001 சட்டசபையில பெரிய்ய மெஜாரிட்டி இருந்தப்போவே இந்த சட்டத்தை திரும்ப கொண்டு வந்திருக்கலாமே. அப்புறம் 1971 ல " சென்னை நுங்கம்பாக்கத்தில் அருணா என்ற ஹோட்டலை முதல்வர் குடும்பத்தினர் (ஊழல் செய்த பணத்தில்) வாங்கியிருப்பதாக கேள்விப்படுகிறோமே உண்மையா என்று காங்கிரஸ் கட்சி டி என் அனந்தநாயகி கேள்வி கேட்டப்போ அவருக்கு அன்றைய முதல்வர் " இரைந்து பேசிடாதீங்க, அருணா ஹோட்டல் முதலாளி உங்கள் மீது வழக்கு போட்டுவிடுவார், அப்புறம் உங்களைக் காப்பற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு வந்துவிடும்" என்று பதில் சொனார். ஆனால் உண்மை என்ன? அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை, " நாங்கள் கூட பிரபல அரசியல் கட்சித்தலைவருக்கு ஒரு ஆசைநாயகி இருப்பதாக கேள்விப்படுகிறோம்" என்றும் துணை (ஆபாச) செய்தியையும் அன்றைய முதல்வர் கூறினார். பூச்சி மருந்து ஊழல், சமயநல்லூர் அனல் மின் நிலைய விற்பனை ஊழல், தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஒரு நாள் நெல் கடத்தல் ஊழல், கோதுமை பேர ஊழல், வீராணம் ஊழல், பிச்சைக்காரர் விடுதிகள் கட்டிட ஊழல், கூவம் மணக்க செய்த ஊழல், போன்ற இன்னபிற ஏராள தமிழர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊழல்கள் எதுவுமே அன்றைய திமுக கொண்டு வந்த சட்டத்தின் முன் வரவே இல்லையே? ( தாத்தா, யாருகிட்டேயும் சொல்லாதீங்க, இன்னிக்கு உங்க பக்கத்துல தமிழக இருளப்பர் வீராசாமி இருக்குராப்போல, அன்னிக்கு ஒரு ஜட்ஜ் வீராசாமி இருந்தாராமே , அவருகூட கொடைக்கானல் பங்களாவுல ரெண்டு "வண்ணத்து பூச்சிகள்" தோள்ல கை போட்டு இருக்காப்போல போட்டோ கூட வந்திச்சாமே, அந்த வீராசாமி தானே நீங்க கொண்டு வந்த விசாரணை கமிசன் ஜட்ஜா இருந்தார்)

No comments:

Post a Comment