Monday, 13 June 2011

கனி அக்காவுக்கு எல்லா மீனும் கிடைத்தது ஆனா ஜாமீன் மட்டும் கிடைக்கல, கிடைச்சா வாங்கிக்கிட்டு வருகிறோம்

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.க., எம்.பி., கனிமொழியின் ஜாமின் மனு மீதான இ‌ன்றைய விசாரணையில் தற்போது உள்ள நிலவரம என்ன என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும் மனித உரிமை மீறில் மோசமானது ஊழல் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

வேலூர் ஜெயிலில் நளினி என்றொரு அம்மணி இருபத்தைந்து வருடங்களாக சிறைவாசம் இருக்கிறார். கருணாநிதி சிறிதளவு இரக்கம் காட்டியிருந்தால் அனுபவித்த தண்டனை போதும் என்று விடுதலை செய்திருக்கலாம். ஆனால் கருணாநிதி இரக்கம் காட்டவில்லை. தந்திரமாக பாராமுகமாயிருந்தார். இன்று அதே போன்று பாராமுகம் கனிமொழி விஷயத்திலும் காட்டப்ப்படுகிறது காங்கிரஸால். விதி வலியது. இது வலிக்கிறது.

தவறுதான் !...தமிழ் இனம் உன்னிடம் எதிர் பார்த்தது தவறு தான் !.... பெற்ற மகளினை திகார் ஜெயிலிலிருந்து மீட்க முடியாதவனிடம்....தமிழ் இனத்தினை சிங்களனின் கொட்டடியிலிருந்து மீட்டுவிடுவாய் என்று எதிர்பார்த்தது தவறுதான் ! 

No comments:

Post a Comment