Thursday, 23 June 2011

லோக்பால் மசோதாவில் அதிகாரம் என்ன?

சமூக பிரதிநிதிகள், 
முறையான விசாரணை நடத்த லோக்பால் அமைப்புக்கு தேவையான நவீன வசதிகள் மற்றும் உபகரணங்களை வழங்க வேண்டும்.
  1. அனைத்து எம்.பி.,க்கள் தெரிவிக்கும் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த அதிகாரம் வழங்க வேண்டும்.
  2.  ஊழல் விசாரணையை துரிதப்படுத்துவதற்கான ஆணையை லோக்பால் அமைப்பே கோர்ட்டுகளை நேரடியாக அணுகிப் பெற வேண்டும். அரசு மூலம் ஆணை பெறும் முறையை தவிர்க்க வேண்டும்.
  3. “பொது அமைப்புகள் தங்களின் பணி நடவடிக்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும்’ என, பரிந்துரை செய்யும் அதிகாரத்தை லோக்பால் அமைப்பிற்கு வழங்க வேண்டும். இதன் மூலம் ஊழல் நடவடிக்கைகள் குறைவதோடு, ஊழல் செய்தவர்கள் பற்றி தகவல் கொடுப்போர் பழிவாங்கப்படுவதும் தடுக்கப்படும். மேலும், லோக்பால் அமைப்பின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டனவா அல்லது நிராகரிக்கப்பட்டனவா என்பது குறித்த விவரங்களையும், சம்பந்தப்பட்ட அமைப்பினர் இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
  4.  ஊழலில் ஈடுபடும் எந்த ஒரு நிறுவனம் அல்லது கான்ட்ராக்டர் அல்லது இதர நபர்களின் லைசென்ஸ், குத்தகை உரிமம், அனுமதி, கான்ட்ராக்ட், ஒப்பந்தம் போன்றவற்றை ரத்து செய்யும் அதிகாரத்தை அல்லது மாற்றி அமைக்கும்படி பரிந்துரை செய்யும் அதிகாரத்தை லோக்பால் அமைப்பிற்கு வழங்க வேண்டும்.
  5.  மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்பு பிரிவை முழுமையாக விடுவிக்க வேண்டும்.
  6.  லஞ்சம் கொடுப்பவர்கள், அது பற்றிய தகவலை தானாகவே முன்வந்து தெரிவித்தால், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
  7.  லோக்பால் அமைப்பிற்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில், பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு நீதிபதிகள், இரண்டு ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள், தலைமை தேர்தல் கமிஷனர், ஆடிட்டர் ஜெனரல், லோக்பால் அமைப்பின் முந்தைய தலைவர்கள் இடம் பெற வேண்டும்.
  8.  தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டும்படி உத்தரவிடும் அதிகாரம், தகவல்களை கண்காணிக்க உத்தரவிடும் அதிகாரம் போன்றவற்றை வழங்க வேண்டும்.இவ்வாறு சமூக பிரதிநிதிகள் தரப்பு வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment