கனிமொழியை மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் அடைத்துள்ளனர்’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். கனிமொழிக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். கனிமொழியை மனிதாபிமானமற்ற முறையில் சிறையில் அடைத்துள்ளனர். அவர்மீது பத்திரிகைகளில் வெளியான பொய்யான குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ., நிரூபிக்க முயற்சி செய்து வருகிறது.
My Comment:
ஏ கிளாஸ் சிறையில் கொப்பளமா?
கனிமொழி போல பல பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அவருக்கு ஒரு குறையும் இல்லாமல், உபசரிப்புகள் நடந்து வருகிறது. அடிக்கடி, எல்லோரும் பார்த்து ஆறுதலும் சொல்கிறார்கள். இவர் போல, சிறையில் உள்ள எல்லா பெண்களும் மனிதாபிமானம் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனரா?
மனிதாபிமானம்.. இப்படி ஒரு வார்த்தை இருப்பது பெரியவருக்கு தற்போதுதான் ஞாபகத்திர்க்கு வந்திருக்கிறது.
பெரியவரே, முள்வேலி தெரியுமா முள்வேலி… கூர் கூறாய் முல் மாதிரி இரும்பு இருக்குமே? பழைய உமர் முக்தார் படம் பாத்திருக்கிறீரா பெரியவரே? அதிலே இத்தாலியர்கள் லிபியர்களை ஆடு மாடு மாதிரி அடைத்திருப்பார்கள். அதேமாதிரி தான் இருந்தது இந்த முள்வேலி. அதில் அடைப்பட்டு கிடந்தவர்கள், என்ன ஆச்சரியம், சாட்ச்சாத், நீங்கள் பேனாவும் பேப்பருமாய் பிழைப்பு நடத்துநீரே, நியாபகம் இருக்கிறதா அந்த மொழியை? உமக்கு சோறு போட்டதே? உமக்கு பேர் வாங்கி தந்ததே? உமக்கு ஆதரவு வாங்கி தந்ததே ? புரிகிறதா? தமிழ் தமிழ், ஆங். அந்த தமிழ் பேசும் மக்கள் அடை பட்டார்கள். தெரு நாயை விட மோசமாக அதில் இருந்தார்கள். மழை பெய்து தண்ணீர் தேங்கி ஒருபுறம், இன்னொருபுறம் அதே தரையில் உண்டு, மலம் கழித்து, தூங்கி… புரிகிறதா பெரியவரே? மனிதாபிமானத்திற்கு அர்த்தம் இருக்கிறதா உம்மிடம்? இந்த மக்கள் கஷ்டப்பட்டதை விட உங்கள் மகள் ரெம்பவே சௌகரியமாக இருக்கிறார். டிவி இருக்கிறதாம். பேப்பர் கிடைக்கிறதாம். தமிழ் உணவு பதார்த்தங்கள் கிடைக்கிறதாம். தனி அரை வேறவாம். மேற்கொண்டு அட்டாச்சிடு பாட்ரூமாம். உங்கள் மகள் எக்கேடு கேட்டால் எங்களுக்கு என்ன? எங்களை மடயர்கலாக்க நினைத்த உமக்கு மன்னிப்பே கிடையாது.
உன் மகளுக்கு இவ்ளோ டயலாக் விடுறீங்களே இலங்கைல எவ்ளோ கொடூரமான தாக்குதல் நடந்தப்போ திறக்காத வாய் இப்போ மட்டும் நல்லா திறக்குது. தமிழ் புகழ் வளர்க்கும் மானாட மயிலாட, மாலை வேளையில் பூபந்து விளையாட்டு, வெஸ்டர்ன் டாயிலெட், பாதுகாப்பான இருப்பிடம் – இது மனிதாபிமானம் இல்லாத நிலையென்றால், இவர் கருத்துபடி கம்பி வேலிக்குள் உணவின்றி இவர் நெஞ்சில் வாழும் ஈழ தமிழர் போல நடத்த வேண்டும் என்கிறாரோ? ஒரு வேளை முள்ளிவாய்க்காலில் அடைத்தால் தமிழ் மானம் காக்க வாழும் மகாத்மா ராஜபக்க்ஷே அரசு விருந்தினராக உபசரித்து தேநீர் விருந்தளித்து, யானை தந்தம் பரிசளித்து இருப்பாரோ? அப்பொழுதாவது சொல்லி விடலாம், என் மகளே அங்கு லட்ச கணக்கான ஈழ மக்களுடன் சந்தோஷமாக இருக்கிறார், அவரை மனிதாபிமானம் மட்டும் அல்ல, மஹா ராணி போன்று நடத்துகிறார் என்று.
கொத்து கொத்தா இலங்கை தமிழர்களையும் நம் தமிழக மீனவர்களையும் நிர்வான படுத்தி சித்ரவதை செய்யப்பட்டு சுட்டு கொன்ற போது எங்கே போச்சி உன் மனித அபிமானம்.
தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் இருக்கும் நளினியை ஏன் திமுக ஆட்சியில் விடுதலை செய்யவில்லை? அப்போ எங்கே போச்சு இந்த மனிதாபிமானம்? ஆயுள் தண்டனை பெற்ற எத்தனையோ பேர், அவர் பிறந்த நாள் இவர் பிறந்த நாள் என்று சில பல ஆண்டுகளிலேயே வெளிவரும்போது, ஆயுள் தண்டனைக் காலமாக பொதுவாக கருதப்படும் கால கணக்கையும் கடந்து சிறையில் வாடும் நளினிக்கும் இதே மனிதாபிமானம் பொருந்துமல்லவா? நீதிக்கு முன் எல்லோரும் சமமே! பொறுத்திருக்கத்தான் வேண்டும்!
No comments:
Post a Comment