Saturday, 11 June 2011

பிரதமருக்கு எதற்கு விதிவிலக்கு?

காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தீவிர முயற்சியின் விளைவாக, மத்திய அரசு, வேண்டா வெறுப்பாக லோக்பால் சட்டத்தைக் கொண்டு வர ஒப்புக் கொண்டது. இதற்கான விதிகள் வரையும் கூட்டத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதாவது, இந்த சட்டத்தின் வரம்புக்குள், பிரதமர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், உயரதிகாரிகள் போன்றோர் இடம்பெறக்கூடாது என, சிதம்பரம் போன்ற சில அமைச்சர்கள் வற்புறுத்துகின்றனர் எனத் தெரிய வருகிறது.விதிவிலக்கு கோரப்படும் அந்த சிலர், ஆகாயத்திலிருந்தா குதித்து வந்தனர்? குடிசை வாழ் குப்பனும், சுப்பனும் போல, இந்த மண்ணில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருபவர்கள் தானே? இவர்களுக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை? எல்லாரையும் போல, இவர்களுக்கும் தலா ஒரு ஓட்டு தானே! எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனக் கூறித்தானே சுதந்திரம் பெற்றோம்!ஊழலில் திளைத்து, கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி வரும் நிலையிலுள்ள காங்கிரசுக்கு, இது ஒரு கடைசி வாய்ப்பு. எந்த வில்லங்கமும் ஏற்படுத்தாமல், லோக்பால் சட்டத்தை உருவாக்கி, உடனடியாக நிறைவேற்றி, செயல்படுத்த வேண்டும்.இல்லாவிடில், சுதந்திரம் பெற்றுவிட்டதால், காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்ற காந்தியின் கனவை நனவாக்கிய, காங்கிரஸ் கட்சியின் கடைசி பிரதமர் என, சரித்திரத்தில் இடம்பெறப் போகிறார் மன்மோகன் சிங்.இன்றைய காங்கிரஸ் ஆட்சி, லோக்பால் சட்டத்தை நிறைவேற்றாவிட்டாலும், அடுத்து வரப்போகும் ஆட்சி, கண்டிப்பாக இச்சட்டத்தை நிறைவேற்றும். அதுவும், முன் தேதியிட்டு அமல்படுத்தி, ஊழல் பெருச்சாளிகளை தண்டிக்கும்; இது காலத்தின் கட்டாயம்.

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்க வலியுறுத்தி, ஏழாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்த பாபா ராம்தேவின் உடல் நிலை, நேற்று மோசமடைந்தது. இதையடுத்து, டேராடூன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உண்ணாவிரதம் இனிமேலும் தொடருமா என்பது இனித் தெரியும்.

காங்., அரசில் ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டி, ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு என, பல ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை, நாடு முழுவதும் பா.ஜ., மூத்த தலைவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெறும்.விவசாய உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 80 ரூபாய் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இது மிகவும் குறைவு. எனவே, குவிண்டாலுக்கு 250 ரூபாய் உயர்த்த வேண்டும். தொலைத்தொடர்புத் துறையில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ., உறுதி செய்த நிலையில், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தானாக பதவி விலகினால் கவுரவமாக இருக்கும்.இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.உடன், தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன் உட்பட பலர் இருந்தனர்.

No comments:

Post a Comment