முன்னர், அண்ணா ஹஸôரே தில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டபோது அதற்கு மத்திய அரசு முதலில் முக்கியத்துவம் தரவில்லை. ஊடகங்கள் மூலம் போராட்டம் இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியதால்தான், அதில் தலையிட வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. அண்ணா ஹஸôரே இப்போராட்டத்துக்குப் பின்னர்தான் இந்தியா முழுவதும் அறியப்பட்ட மனிதரானார்.
பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு ஏன் இந்த அளவுக்கு அவசரப்படுகிறது, அச்சப்படுகிறது? மத்தியப் பிரதேசத்திலிருந்து விமானம் மூலம் தில்லிக்கு வந்த பாபா ராம்தேவை, பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பவன் குமார் பன்சால், சுபோத் காந்த் சகாய் என்று ஒரு மத்திய அமைச்சர்களின் குழுவே விமான நிலையத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்து கெஞ்சுகிற அளவுக்கு அவரது போராட்டம் ஆட்சியாளர்களைப் பயமுறுத்துகிறதே அது ஏன்?
ஊழலுக்கு எதிரான போராட்டம் தனிநபர்களை முன்னிலைப்படுத்துவதாக அமைந்து, பல்வேறு அணிகளாகப் பிரிந்து ஆங்காங்கே நடக்குமேயானால், போராட்டத்தின் குறிக்கோள் பின்தள்ளப்பட்டுவிடும்.
லோக்பால் மசோதாவின் வரம்பிற்குள் ஜனாதிபதியும் சேர்க்கப்படவேண்டும், பிரதமர், உச்சநீதிபதி என எபேர்பட்ட கௌரவமான பதவியில் இருப்பவர்கள் ஆனாலும் சரி, முதல் குடிமகன் ஜனாதிபதி முதல் கடைசி குடிமகன் வரை அனைவரும் லோக்பால் சட்டவரம்பிற்குள் உட்படுத்தபடவீண்டும்.
No comments:
Post a Comment