Wednesday, 22 June 2011

கண்ணீர் விட்ட கருணாநிதி

தி.மு.க., தலைவர் கருணாநிதி டில்லி, திகார் சிறையில் சந்தித்து, கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்தார். கனிமொழியை கண்டதும், தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு பார்த்தபோது, கண்ணிலிருந்து, தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்தது. கனிமொழியை தனியாக 15 நிமிடங்கள் சந்தித்தார் கருணாநிதி. ராஜா, சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார். கருணாநிதி சந்திக்க வருவதையடுத்து, 6ம் எண் சிறையில் உள்ள கனிமொழி, தயார் நிலையில் இருந்தார். 4ம் எண் சிறையில் உள்ள சரத்குமாரும், ஒன்றாம் எண் சிறையில் உள்ள ராஜாவும், கனிமொழியின் 6ம் எண் சிறைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். 15 நிமிடங்களுக்கு முன்பே இவர்கள் மூவரும், கருணாநிதியின் வருகைக்காக காத்திருந்தனர்.

கனிமொழியை கண்டதும், கருணாநிதி மிகுந்த உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. தன் கறுப்புக் கண்ணாடியை கருணாநிதி கழற்றியுள்ளார். அப்போது, அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்ததைக் காண முடிந்ததாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. கனிமொழிக்கு கண்ணீர் மல்க ஆறுதல் கூறிய கருணாநிதி, அடுத்ததாக முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் "டிவி' நிர்வாகி சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்தார். அந்த இருவருக்கும் ஆறுதல் வார்த்தைகளை கருணாநிதி கூறினார்

No comments:

Post a Comment