Tuesday, 7 June 2011

யோகா குரு ராம்தேவ் சொத்துகள்: அமலாக்கப் பிரிவு விசாரணை

உண்ணாவிரதப் பந்தலில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட யோகா குரு ராம்தேவின் சொத்துகள் தொடர்பாக, அமலாக்கப் பிரிவினரும், வருமான வரித்துறையினரும் தீவிரமாக விசாரிக்கத் துவங்கியுள்ளனர். அவருக்கு எதிரான புகார்கள் குறித்தும் விசாரணை நடைபெற உள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த யோகா குரு பாபா ராம்தேவ், போலீசாரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். தற்போது, ஹரித்துவாரில் அவரது ஆசிரமத்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

MY Opinion:
பிரதமர் என்ன ஜனாதிபதி முதல் கடைசி குடிமகன் வரை அனைத்து சட்டவரம்பிர்க்குள் உட்படுத்தப்படவேண்டும். இந்துவுக்கு ஒன்னு, ஜந்துவுக்கு ஒன்னு, அந்த சாதிக்கு ஒன்னு, இந்த சாதிக்கு ஒன்னு இப்படி நம்மக்களை பிரிதாள வெள்ளைக்காரன் போட்ட மாதிரி எல்லாம் இன்னும் இருப்பது தேச ஒருமைப்பாட்டிற்கு விரோதமானது....
 
காங்கிரஸ் மந்திரிகள் என்ன வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா? பிரதமரோ அல்லது நீதி அரசர்களோ யாராயினும் நேற்றுவரை சாதாரண மனிதர்கள்தான். இவர்கள் ஏற்றிருப்பது "பதவி" மட்டுமே..'கடவுள்" ஸ்தானத்தில் உள்ளவர்கள் அல்ல..!! நேர்மையானவர்கள் மட்டுமே இனி "பதவியில்" இருக்க முடியும் என்பதே இந்த லோக்பால் விசாரணை அமைப்பின் நோக்கமாகும். காங்கிரஸ் உளமார லஞ்சத்தை ஒழிக்க எண்ணியிருக்குமே என்றால் எதற்க்காக இந்த படபடப்பு..? தடாலடி நடவடிக்கை..?  
 
குற்றம் உள்ள கூட்டமா..காங்கிரஸ்?  



ராம்தேவ் மீது தனிப்பட்ட தாக்குதலை தொடுக்கவே கங்கணம் கட்டி வேலை செய்கின்றது..!! அவரை.. அவர் மீதான சொத்துக்களை விசாரிப்பதை முடுக்கி விட்டதால் அவரது நடவடிக்கையை யாரும் "குறை" சொல்லப்போவதில்லை. நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் அது யார் செய்கின்றனர் என்பதல்ல..அவர்களால் என்ன செய்யப்படுகின்றது என்பதையே மக்கள் விரும்புகின்றனர். எனது முந்தைய கருத்துக்கள் மூலம் சொன்னபடி இவர்கள் அன்னா ஹசாரே மீதும் தனி நபர் "விமர்சனத்தை" முடுக்கிவிட்டு கேவலப்படுத்த முயற்சிப்பார்கள். ராம்தேவ் மீதான நடவடிக்கை அதனை உண்மையாக்குகின்றது. லோக்பால் அமைப்பையே இல்லாமல் ஆக்கும் முயற்சியை நிச்சயம் இவர்கள் தொடர்வார்கள். நாட்டின் கருப்புப்பணம் வரப்போவது இல்லை..லஞ்சம் ஒழிக்கப்பட போவதில்லை என்று யாரும் மனம் தளரவேண்டாம். இன்றைய இளையர் அமைப்புக்கள் விடப்போவதில்லை..துவக்கம் குளறுபடியாயினும் முடிவு நல்லபடியே அமையும்..அதுவரை அரசாங்கம் என்கிற அமைப்பு தொடர்ந்து நல்லோருக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிடும்..இறுதியில் அந்த அரசாங்கம் துடைத்து ஒழிக்கப்படும்..!


No comments:

Post a Comment