ஒரு அனல் மின் உற்பத்தி கலன் வடிவமைப்பு, ஒரு 800 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க ஆகும் காலம் 36 லிருந்து 48 மாதங்கள். தனியாரினால் அமைக்கப்படும் அனல் மின் நிலையங்கள் எல்லாம் இக் காலகெடுவுக்குள் செயல் பாட்டுக்கு வந்து விடும் பொழுது அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் இன்னமும் அடிக்கல் அளவிலேயே இருக்கிறது. தமிழகத்தின் உடன்குடி திட்டமும், ஆந்திராவில் ஒரு தனியார் மின் திட்டமும் ( எங்கள் குழுவே இதில் பணியாற்றியது )ஒரே நாளில் பூமி பூஜை போடப்பட்டது. இன்று ஆந்திர நிறுவனம் உற்பத்தியை தொடங்கி, ஆந்திர மின்வாரியத்திற்கு (சப்ளை டு மெயின் கிரிட்) மின்சாரத்தை வழங்க ஆரம்பித்து விட்டது. உடன்குடி திட்டத்திற்கு இன்னமும் தமிழக அரசால் சுற்று சூழல் துறையிலிருந்து அனுமதி கடிதமே வாங்கப்படவில்லை என்பதே வருத்தமான உண்மை.
No comments:
Post a Comment