Sunday, 26 June 2011

விலைவாசி உயர்வை நியாயப்படுத்தக்கூடாது: கருணாநிதி

மத்திய அரசு எப்போதும் போல் விலைவாசி உயர்வை நியாயப்படுத்தக் கூடாது. டீசல் விலை உயர்வு விஷயத்தில், மேற்கு வங்க முதல்வர் வழியில், தமிழக அரசு செயல்பட வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இவரது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசு ஒன்பது முறை பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்திய போது வாய்மூடி மௌனம் காத்த பெரியவர் இப்போது வீறுகொண்டு எழுந்து விட்டார் . மத்திய அரசு லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்திய போது இவர் ஒரு ரூபாய் குறைத்தார் .விலைவாசி உயர்வு பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, இவரது ஆட்சியில் மக்களுக்கு வாங்கும் சக்தி பெருகி இருப்பதாக பெருமிதப்பட்ட பெருந்தகை இப்போது நடுத்தர மக்களைப் பற்றி கவலைப்படுகிறார் . வெங்காய விலை விஷம் போல் ஏறுகிறதே? என்ற பத்திரிக்கைகளின் கேள்விக்கு வெங்காய விலையா, பெரியாரிடம் போய் கேள்.. என்று சொன்னது யார்? காய்கறிகளின் விலை பன்மடங்கு உயர்கிறதே என்று சட்டசபையிலே மார்க்சிஸ்ட் உறுப்பினர் கேள்வி எழுப்பிய போது, வருமானம் உயரும் பொழுது விலைவாசியும் உயரத்தான் செய்யும் என்று அறிவுப்பூர்வமாக பதில் சொன்னது எந்த கட்சியை சேர்ந்தவர்? எந்த அரசில்? 
ஏற்கனவே ஒரு இலட்சம் கோடி ரூபாய் கடனாளியாக தமிழக மக்களை ஆக்கிவிட்டு சென்றிருக்கிறீர்கள் இதில் காஸ்,பெட்ரோலுக்கு மாநில அரசு வரி வசூலிக்காமல் இருந்தால் எப்படி மின்சார தட்டுப்பாட்டை போக்குவது. வளர்ச்சி திட்டங்களுக்கு பணத்துக்கு எங்கே போவது.தீதி ஆட்சியில் அங்கம் என்பதால் வேறு வழியே இல்லாமல் பதினாறு ரூபாய் குறைத்தார்.ஆனால் இந்த விலை குறைப்பினால் விலைவாசி ஏறாமல் இருக்குமா?மத்திய காட்டாட்சியை தட்டிகேட்க வக்கில்லை மாநிலத்தில் அரசியல் பண்ணுகிறீர்கள்.விலையேற்றமே தவறு என்கிறோம் நாங்கள். நீங்களோ மாநில அரசு பரிகாரம் காணவேண்டும் என்கிறீர். உங்களுக்கு எங்கள்மேல் எவ்வளவு அக்கறை.உலகிலேயே இந்தியாவில்தான் எரிபொருள் விலை அதிகம்.வளைகுடா நாடுகளில் சவுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்திய ரூபாயில் (91 ) 5 /-ம் ,(95 ) 8 /-மட்டுமே.‌ சவுதி பணத்தில் சொல்வதென்றால் முறையே 45 பைசா மற்றும் 65 பைசா.ஏன் நம் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான்,பங்களாதேஷ் இலங்கையில் கூட இந்தியாவை விட விலை குறைவுதான்.நம் நாட்டிற்கு மட்டும் ஏன் இந்த நிலை.ரிலையன்ஸ் போன்ற பெரும் பண முதலைகள் மேலும் பணம் சம்பாதிக்கவே மத்திய அரசு பாவப்பட்ட மக்கள் தலையில் விலை உயர்வை திணிக்கிறது.2 ஜி உட்பட அனைத்து ஊழல்களுக்கும் இந்த பண முதலைகளே மூல காரணம்.எனவே விலை உயர்வே தவறானது.அதை முழுவதும் திரும்ப பெற்று மக்களாட்சி நடத்தினால் மத்திய அரசுக்கு நல்லது. இல்லாவிட்டால் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடந்த அமைதி புரட்சி இந்தியாமுழுவதும் நடக்கும்.காந்தி கண்ட கனவு நனவாகும்.

No comments:

Post a Comment