சாவை கண்டு நான் அஞ்சவில்லை. லோக்பால் மசோதாவுக்காக துப்பாக்கிக் குண்டுகளையும் எதிர்கொள்ளத் தயார்,'' என, அன்னா ஹசாரே கூறினார். சமூக பிரதிநிதிகள் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: அரசு உருவாக்க விரும்பும் லோக்பால் அமைப்பு, ஊழலை ஒழிக்காது. அதற்கு மாறாக, ஊழல் குறித்து புகார் கொடுப்பவர்களை அடக்கி விடும். லோக்பால் மசோதா தொடர்பாக அரசு தரப்பினர் தெரிவித்துள்ள பரிந்துரைகளில், பெரும்பாலான அரசு அதிகாரிகள், லோக்பால் விசாரணை வரம்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊழல் புரிந்தவர்களுக்கு சாதகமாகவும், அவர்கள் தப்பிக்கும் வகையிலும் சில விதிகள் இடம் பெற்றுள்ளன. கிராம அளவில் உள்ள சிறிய அரசு சார்பற்ற அமைப்புகளைக் கூட, லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரும் போது, பெரும்பாலான பொது ஊழியர்களை இந்த வரம்பில் இருந்து நீக்குவது எப்படி சரியாக இருக்கும்.
இன்னும் எத்தனை அன்ன ஹசாரே வந்தாலும் ஊழலை ஒழிக்க முடியாது, ஜாதி, மதம், ஏன் எய்ட்ஸ் ஐ விட மோசமான உயிர்கொல்லி நோய் இந்த ஊழல். இந்த ஊழலுக்கு அழிவே இல்லை, என்ன ஒரு ஆறுதலான விஷயம் மக்கள் இன்று மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள் அந்த அளவிற்கு பத்திரிக்கை துறை சுதந்திரமாக உள்ளது அவ்வளவுதான் மத்தபடி ஊழலை ஒழிப்பேன் என்று சொல்வது எல்லாம் நிலவை பார்த்து நாய் குறைத்த கதைதான்.
நம் மாநிலத்தில் ஒரு கவுன்சிலரை எதிர்த்துப் போராடினாலே நம் உயிர் நம் கையில் இல்லை!நேர்மையான கவுன்சிலர்களுக்கே பாதுகாப்பில்லை!(மதுரை லீலாவதி கொலையுண்டது நினைவிருக்கிறதா? அவர்களால் பயன் பெற்ற அரசு அதிகாரிகள் நம்மை தீர்த்துக் கட்டிவிடுவார்கள்! அப்படி இருக்கும் தமிழகத்தில் ஊழல் ஒழிப்புப் போராட்டம் ஜெயிப்பது கடினம்! அப்படியே யாராவது தைரியமாகப் போராட முன்வந்தால் அவர் என்ன சாதி, மதம், ஊர் எனப் பார்த்து அவரை கேவலப் படுத்த சில குள்ளநரிகள் கட்டிருக்கின்றனர்! போலீசும் ஊழல்வாதிகள் பக்கம்! நாடு எப்படி உருப்படும்?
பொது மக்களே வீதிக்கு வந்து போராடுகிறார்கள். போராடுபவர்கள் யாராக இருந்தால் என்ன?அதில். காவி நிறமென்ன? வெள்ளை நிறமென்ன? பச்சை நிறமென்ன? அரசு இயந்திரத்தின் மிரட்டல் , பொய்ப்பிரசாரம், வருமான வரி ரெய்டு ஆகியவற்றுக்கு பயப்படாமல் ஒருவர் போராடினால் அவரது கை சுத்தமாகத்தான் இருக்க வேண்டும்! அன்னா ஹசாரேக்கும், ராம்தேவுக்கும் பயம் இருந்தால் போராடுவார்களா? எனவே சம்மந்தமில்லாமல் அவர்களை இந்து தீவீரவாதிகளாக சித்திரிக்காதீர்கள்!
No comments:
Post a Comment