கோடி கோடியாய் பணத்தை படித்த ஏமாளிகளிடமிருந்து புடிங்கி விட்டு, பெரிய ஆயுத படைக்குத் தளபதி உண்ணா விரதமிருக்கிராராம்! ச்சே ச்சே கேட்கவே கேவலமாக இருக்கிறது. படிக்கும் பொழுதே நாக்கை புடிங்கிக் கொண்டு சாகலாம் போல வருகிறது. காந்தி மகான், தனது 75 வயதை தாண்டிய தள்ளாத உடம்பை வைத்துக்கொண்டு மொத்தமாக 17 தடவைக்கு மேலே கடுமையான உண்ணா விரதத்திலிருந்திருக்கிறார். இரண்டு தடவை முப்பது நாட்களை நெருங்கியும், மனத்திடமாக இந்திய மக்கள் அன்னியர்களிடமிருந்தும், நம் நாட்டிலியே அடிமைப் படுத்தப் பட்டிருந்த ஹரிஜனகளுக்காகவும், பெண்களுக்காகவும் போராடியிருந்திருக்கிறார்!!!!, காந்தி மகான் உன்னாவிரதத்திளிருந்து இறக்க நேர்ந்தால் இந்தியா பெரிய கலவர பூமியாக மாறி, வெள்ளையர்கள் ஆட்சி தடுமாற நேரிடும் என்று வெள்ளையர்களே காந்தி மகானின் கோரிக்கைகளை நிறைவேற்றி அண்ணல் காந்தி மகானின் உண்ணாவிரதத்தை நிறைவு செய்திருக்கிறார்கள். பொம்பளைகளின் சேலையில் ஒழிந்த இந்த ஆளைப் பற்றியும், அவரின் ஒரு நாலு நாளைய உண்ணா விரத நாடகங்களைப் பற்றியும் பெரிதாக தம்பட்டம் அடிக்கத் தேவையில்லை.
No comments:
Post a Comment