Saturday, 4 June 2011

பாபா ராம்தேவ் கோரிக்கைகள் என்ன?

1. வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பதை, தேசிய குற்றம் என அறிவிக்க வேண்டும்.


2. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை, தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும்.


3. ஊழலில் ஈடுபடுவோருக்கு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்க வேண்டும்.


4. அன்னா ஹசாரே வலியுறுத்தும் லோக்பால் மசோதாவை சட்டமாக்க வேண்டும்.


5. ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக, விரைவு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும்.


6. கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்படுவதை தடுக்கும் வகையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதை வாபஸ் பெற வேண்டும்.


7. இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட தொழில் முறை படிப்புகள், இந்திய மொழிகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.


8. நாட்டில், நிலையான அரசியல் சூழ்நிலை நிலவ வேண்டுமெனில், பிரதமரை, மக்களே நேரடியாக தேர்வு செய்யும் வகையில் தேர்தல் நடத்த வேண்டும்.


9. அனைத்து தரப்பு மக்களும், தங்களின் வருவாய் பற்றிய விவரங்களை கட்டாயமாக தெரிவிக்க, உத்தரவிட வேண்டும்.


10. வருமான வரி தொடர்பான விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.


11. உணவுப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, அதிகரிக்க வேண்டும்.


12. அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான கூலி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.


13. விவசாயிகளை கட்டாயப்படுத்தி, நிலம் கையகப்படுத்தும் நடைமுறையை கைவிட வேண்டும்.


14. இந்தி மற்றும் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.


அரசியலில் ஆர்வம் இல்லாத பாபா ராம்தேவ், சமூக சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்காக, "பாரத் ஸ்வபிமான்" என்ற அமைப்பை, துவக்கினார். இந்த அமைப்பின் நோக்கமாக, ஐந்து முக்கிய விஷயங்கள் வலியுறுத்தப்படுகிறது.

1. 100 சதவீத ஓட்டுப் பதிவு

2. 100 சதவீத தேசிய சிந்தனை

3. அன்னிய நிறுவனங்களை புறக்கணிப்பது, சுதேசி பொருட்களை வாங்குவது.

4. நாட்டு மக்களை ஒருங்கிணைப்பது.

5. யோகாவை மையமாக கொண்ட விஷயங்களை செயல்படுத்துவது.

1 comment:

  1. இந்த உண்ணா நோன்புக்கு எதிரான தடை காங்கிரஸ் அரசு ஊழலை ஒழிக்கத் தயாராய் இல்லை என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சிதான் ஊழலை ஊக்குவிக்கிறது. ஊழல் செய்வோரைப் பாதுகாக்கிறது.

    ReplyDelete