Saturday, 4 June 2011

என் குடும்பத்தினர் மீதும், வஞ்சனையாளர்கள் பழி தீர்த்துக் கொண்டதன் விளைவு' - கருணாநிதி

ஓட்டுப் போட்டவர்கள் மக்கள். அவர்களா வஞ்சனையாளர்கள்? இவர் மீதும், இவர் குடும்பத்தினர் மீதும், வாக்காளர்களுக்கு அப்படி என்ன பகை, விரோதம் இருக்க முடியும்? 

திகார் சிறையில், ஆறாம் எண் அறையில் கைதியாக உள்ளார் கனிமொழி. தனக்கு ஜாமின் வேண்டும் என, டில்லி ஐகோர்ட்டில், முறையீடு செய்திருக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம், விசித்திரமாக உள்ளது. பள்ளி செல்லும் வயதில், தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவனைப் படிப்பிக்க, தான் வீட்டில் இருப்பது அவசியம் என்றும், அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது. 

கனிமொழிக்கு இருக்கும் வசதிக்கு, ஏற்காடு மாண்ட் போர்டு போன்ற, பணக்கார குழந்தைகள் படிக்கும் பள்ளியில், விடுதி மாணவராகச் சேர்த்து படிக்க வைக்கலாமே? ஏன், அவரது கணவர் அரவிந்தன், வீட்டில் தானே இருக்கிறார்... அவரால் தன் மகனைப் படிக்க வைக்க முடியாதா? பாட்டி ராஜாத்தியால் முடியாதா? அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தாய், வேறு ஒருவரை திருமணம் செய்து, சிறுவயதிலேயே அவரை பிரிந்து விட்டார். ஒபாமாவை படிக்க வைத்து, இந்த நிலைக்கு ஆளாக்கியதே, அவரது தாய்வழி பாட்டி தானே! ஏன், அண்ணாதுரையைப் படிக்க வைத்து, அறிஞர் ஆக்கினதே அவரது சித்தி தானே?

No comments:

Post a Comment