Thursday, 2 June 2011

ஓப்பனர் கீ'யுடன் புது ரக பீர் டாஸ்மாக் கடையில்

டாஸ்மாக் கடைகளில், "ஒப்பனர் கீ' யுடன் கூடிய புதிய பீர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பீர் பாட்டில் மூடியுடன் "கீ' இணைந்திருப்பதால் "குடி'மகன்கள் பல்லால் கடித்து மூடியை திறக்கவோ, "கீ'யை தேடி அலையவோ அவசியமில்லை. டாஸ்மாக் கடையில் பீர் வாங்குபவர்கள் "ஓப்பனர் கீ' மூலம் மூடியை திறப்பார்கள். "கீ' இல்லாவிடில் பெரும்பாலான "குடி'மகன்கள், மூடியை பல்லால் கடித்து திறப்பார்கள். பல்லால் கடித்து மூடியை திறக்கும் போது, சில நேரங்களில் பல் உடையும். அரிதாக சில சமயங்களில் பாட்டிலும் உடையும். பீர் சாப்பிடும் குடிமகன்கள் சிரமத்தை தவிர்க்க, தற்போது டாஸ்மாக் கடைகளில் "ஒப்பனர் கீ' யுடன் கூடிய புதிய ரக பீர் விற்பனைக்கு வந்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள "கார்ல் பெர்க்' என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ள "டூபோர்க் பிரிமியம் பீர்' பாட்டில்கள் அனைத்திலும் மூடியின் அருகிலேயே "கீ' பொருத்தப்பட்டுள்ளது. இந்த "கீ'யை மேலே தூக்கினால் போதும், மூடி தானாக திறந்து விடும். எனவே, டூபோர்க் பிரிமியம் பீரை திறக்க குடிமகன்கள் "கீ' யை தேடவேண்டிய அவசியம் இல்லை. இந்த புதிய ரக பீர், 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய ரக பீர் கடந்த ஒரு வாரமாக டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. டாஸ்மாக் கடையில் பீர் வாங்கி குடிப்பவர்கள் "கீ' தேட வேண்டிய அவசியம் இல்லாததாலும், மூடி திறக்க எளிதாக இருப்பதாலும், "குடி'மகன்கள் டூபோர்க் பிரிமியம் பீரை கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.

தான்.குஜராத் முதல்வர் மோடிவுடன் நல்ல நடப்பை பேணிவரும் நம் முதல்வர் அவரில் கொள்கைகளையும் கடைபிடித்தால் தமிழகம் வளம் பெரும்.
(இந்தியா வில் மதுவிலக்கு அமலில் உள்ள ஒரே மாநிலம் குஜராத்)

No comments:

Post a Comment