""ஊழலுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட, பாபா ராம்தேவ்க்கு தகுதியில்லை,'' என தமிழக காங்., மாஜி தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.காங்., பிரமுகர் இல்ல திருமண விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரியும், வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களின், 400 லட்சம் கோடி கருப்பு பணத்தை கொண்டு வர வேண்டும், என வலியுறுத்தி பாபா ராம்தேவ் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார். பாபா ராம்தேவ் இந்த போராட்டத்தில் ஈடுபட தகுதியில்லாதவர். அவர் தனி விமானம் மூலம் எங்கும் பயணம் செய்து வருகிறார். ஆடம்பரமான வாழ்க்கை நடத்தி வரும் பாபா ராம்தேவ், செல்வந்தர்களை மட்டுமே அருகில் வைத்து கொள்கிறார். பணம் இல்லாதவர்களை துரத்தி விடும் பாபா ராம்தேவ், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பது வியப்பாக உள்ளாது.

No comments:
Post a Comment