"என் வழி தனி வழி' என்ற பாணியில் ராகுல் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. கேரளாவில், பெயர் தெரியாத வேட்பாளர்களை, இளைஞர் காங்கிரஸ் சார்பில் நிறுத்தினார். அதில் அதிகம் பேர் தோல்வியைத் தழுவினர். தமிழகத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். உத்தரப்பிரதேசத்தில், தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து, தற்போது பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளார் ராகுல். டில்லிக்கு அருகே உள்ள உ.பி., கிராமத்தில், விவசாயிகளிடமிருந்து நிலத்தை பெற, மாயாவதி அரசு பலரைக் கொலை செய்து புதைத்துள்ளது என்று, பிரதமரிடம் புகார் அளித்தார் ராகுல். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என, மாயாவதி மறுத்துள்ளதோடு, புதைக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவுமே இதுவரை கிடைக்கவில்லை. இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன படு சீனியர் காங்கிரஸ் தலைவர்கள், ராகுலுக்கு அட்வைஸ் செய்பவர்கள் சரியில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
"ராகுலை வைத்து அடுத்த பார்லிமென்ட் தேர்தலை சந்திக்க முடியாது. பிரியங்கா வந்தால் தான், காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது' என்று, காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் கருதுகின்றனர். ராகுலின் இமேஜ், எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ளாத கல்லூரி மாணவர் போலவே உள்ளது. ஆனால், இந்திராவைப் போல தோற்றமளிக்கும் பிரியங்கா, குடும்ப பாங்கானவர், மக்கள் அவரை நம்புவர்' என்கின்றனர் காங்கிரசார்.
No comments:
Post a Comment