Saturday, 4 June 2011

எந்த விதமான ஊழலாக இருந்தாலும் மக்களை மறக்க அடித்து விடலாம்

அந்த ஐந்து கட்டளைகள் படி எந்த விதமான ஊழலாக இருந்தாலும் மக்களை மறக்க அடித்து விடலாம் மீண்டும் அதை விடப் பெரிய ஊழல்களை நடத்தலாம்.

1. முதலில் ஊழலை செய்து முடித்து விடுவது. யாருக்க்கும் தெரியாமல் அமுங்கி விடும் என்று நம்புவது

2. வெளியில் தெரிய வந்தால் ஊழலே நடக்கவில்லை என்று சாதிப்பது. கட்சியின் படித்த பெரிய அறிவாளிகளயும் பிரச்சாரகர்த்தர்களையும் கொண்டு ஆளுக்கு ஒரு விதத்தில் பேசி மக்களைக் குழுப்புவது

3. அதையும் மீறி போய் விட்டால் ஒரு கமிட்டி அல்லது குழு அமைத்து விசாரணைச் செய்ய வைத்து ஊழலே நடக்கவில்லை என்று அறிக்கை விடுவது

4. மெதுவாக ஊழல்களைக் கையாளப் போகும் அதிகாரிகள் நீதிபதிகள் பதவியில் தன் அடியாட்களை அமர்த்துவது 

5. அவர்களிடம் விசாரணை வரும் வரையில் காலம் தாழ்த்துவது. உரிய தருணத்தில் தன் அடியாட்கள் விசாரணையை நடத்துமாறு செய்து விஷயத்தை நிரந்தரமாக இழுத்து மூடுவது.

இந்த ஸ்பெக்ட்ரம் பணம் “நம் ஒவ்வொருவரது உழைப்பின் பயன்” என்பதை அறிவோம். நம் வீட்டுச் சொத்து கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது அவசியம். கொள்ளையர்களை இனம் கண்டு தண்டிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட. அந்நிய நாட்டவரிடம் பிச்சை கேட்டு சுதந்திரம் வாங்கியதால் தான் இந்த நிலைமை! போராடி வாங்கி இருந்தால் சுதந்திரத்தின் அருமை தெரிந்து இருக்கும்!

No comments:

Post a Comment