Wednesday, 1 June 2011

நாளை கருணாநிதி 88-வது பிறந்த நாள் விழா

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நாளை மறுநாள் 88-வது வயது பிறக்கிறது.   தி.மு.க. இளைஞர் அணி சார்பில் கருணாநிதியின் 88-வது பிறந்த நாள் விழா நாளை (வியாழக்கிழமை) சென்னையில் கொண்டாடப்படுகிறது.கவிஞர் வைரமுத்து, அண்ணா நூலகம் சுப.வீரபாண்டியன், “வள்ளுவர் கோட்டம்” என்ற தலைப்பிலும், திண்டுக்கல் லியோனி ’அறிவாலயம்’ தலைப்பிலும், நடிகை குஷ்பு ’திரைக்காவியம்’ என்ற தலைப்பிலும், அப்துல்காதர் ’தொல்காப்பிய பூங்கா’ எனும் தலைப்பிலும் வாழ்த்துரை வழங்குகிறார்கள். 
 
தமிழுக்கு தொண்டாற்றிய தானைத்தலைவா. இலங்கை தமிழர்கள் செல்வச்செழிப்பும் நீங்காத சிரிப்பும் கொண்டிருக்கச்செய்த சூரியக்குடும்ப கீற்றே. தொண்டர்கள் அனைவரையும் பேரின்பக்கடலில் திளைக்கச்செயும் மணிமுடியே. குடும்ப நாயகனே. உன்னையும் உன் குடும்ப கண்மணிகளையும் எங்கள் தலைவர்களாக பெற இந்த தமிழ்த்திருநாடு என்ன தவம் செய்தததோ

No comments:

Post a Comment