தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரையும் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல்வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவித்தார்.
ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெ., சட்டசபையில் இது தொடர்பான விஷயத்திற்கு விளக்கம் அளித்து இவர்களை காப்பாற்றும் அதிகாரம் தமக்கு இல்லை , இதில் தான் தலையிட முடியாது. என முற்றுப்புள்ளி வைத்தார்.
Height of comedy Karunathi:
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதி:- மரணப்பிடியில் இருந்து இவர்களை காப்பாற்ற வேண்டும். பலரது விடுதலைக்கு காரணமாக இருந்தவன் என்ற முறையில், கேட்கிறேன். தூக்குமேடையில் இருந்தவர்கள் அன்று முதல் எத்தகைய தூய வாழ்வில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை அறிந்தவன். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எவ்வித பயனும், விளைவும் ஏற்பட போவதில்லை. குற்றத்தை எண்ணி வாழ்நாள் முழுவதும் வருந்துவது தான் தூக்கை விட கடினமானதாக இருக்கும்.
நமது பதில்:- கலைஞர் அவர்களே சாதிக் பாட்சா-வின் மரணம் தற்கொலையா கொலையா என்பது குறித்து இறுதியான, நம்பத்தகுந்த தகவல் வரவில்லை!!!! துணிவுடன் அனைத்தையும் கூறிவிட, தில்லிக்கு விமான டிக்கெட் எடுத்தவர் என்ற முறையில் சாதிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே பலரும் கருதுகின்றனர்!!!! அதுதான் உண்மையென்றால் சாதிக் பாட்சாவைக் கொன்றவனும் இதை நினைத்துப் பார்த்திருக்கலாம் அல்லவா???? உங்களுக்கு இருக்கும் இளகிய மனது, கருணையில் தோய்ந்த இதயம் ஏன் அவனுக்கு இல்லாது போயிற்று????
- இலங்கையில் நடக்கும் நடந்த கொடுமைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் ?
- கேரளாவில் முதல்வராக இருந்த நம்பூதிரக பாட் அவர்கள் இவ்வாறு ஒரு தூக்கு தண்டனை கைதியை மாநில அரசின் சட்ட திட்டத்தின் படி விடுதலை செய்து உள்ளார்
- அப்போதைய முதல்வர் காமராஜர் 1957 ஆம் ஆண்டு தூக்குக் கயிற்றிலிருந்து பாலன் என்பவரை காப்பாற்றியது எப்படி?
- இந்த முன்று பேரும் காப்பாற்ற பட வேண்டும்....இந்த 10 வருஷமா கருணை மனுவை நிராகரிக்க, 20 வருட சிறை தண்டனை எதற்கு அப்போதே தூக்கில் போட்டு இருக்கலாமே.....இது அநீதி மற்றும் சோனியாவின் மனிதபிமானமாற்ற செயல்...
- மனிதனொருவனின் உயிரெடுக்க மனிதனுக்கு உரிமையில்லை. உயிருக்கு உயிர் என்பதும் எதிர்க்கப்படவேண்டிய ஒன்று. இனியாவது சமுதாயம் திருந்த வேண்டும். மன்னிக்கும் மனதுக்கு பக்குவம் தேவை. இதில் கூட அரசியல் செய்ய எப்படித்தான் சிலருக்கு மனம் வருகிறதோ? மக்கள் பாடம் கற்பிக்க கற்பிக்க கற்கும் ஆர்வம் அதிக மாகிறது போலும்.
- இதுதான் ராஜீவ் கொலையிலும் நடந்தது. அமைதி படையால் பாதிக்கப்பட்டோர் குமுற சிலரால் சில நாடுகளால் பணம் பார்த்தோர் உதவி செய்தனர், கொலை செய்ய வழி செய்தனர். பணம் பார்த்தனர் பதவியும் அனுபவித்து மகிழ்ந்தனர். ஆனால் பாவம் ஒரு பக்கம், பழி ஒருபக்கம் என்பது போல கொலை செய்ய தூண்டியவன் சுதந்திர காற்றை சுவாசிக்க கொலை செய்தவர்கள் தப்பித்து பின் தற்கொலை செய்துகொள்ள எதற்கோ துணை நின்றவர்க்கும் தெரிந்தும் தெரியாமலும் உதவி செய்தோர் சிக்கினரா. பழி தீர்க்க வேண்டாம். மரணம் தெரிந்தோ தெரியாமலும் இழப்பு எப்படியும் நமக்கே. அன்று ஒரு நல்ல அரசியல் தலைவன் இன்றோ மூன்று தமிழர்கள் சந்திரசாமி சுப்ரமணியசாமி, இலங்கை கே பி பத்மநாபன், இன்னும் பலர் தப்பிக்க , எம் கே நாராயணன் கார்த்திகேயன் இன்னும் பலர் பதவி பார்க்க இந்திய தலை எழுத்தை நிர்ணயிக்கும் பிரம்மாவாக மாற அன்று ஒரு மரணம் இன்று இந்திய ஒற்றுமையை குலைக்க இந்த மூன்று மரணம் தேவையா ? இலங்கை போர் குறித்து பேசும்போதும் இராஜீவ் கொலை குறித்தும் பேசினால் எதனால் சோனியா அஞ்சுகிறார். கே பி குறித்து பேசினால் பிரணாப் எதனால் அஞ்சுகிறார். தங்க பாலு போராட்டம் ( இலங்கை துதரகம் முன்பு பதவி பறிபோனதும் ) குதித்தாரே உடனே சோனியா நடுங்க காரணம் என்ன ? எங்கு ஒளிந்துள்ளது உண்மை. மீண்டும் புறப்படட்டும் ஒளிவு மறைவற்ற விசாரணை. இராஜிவின் ஆன்மா ஓய்வெடுக்கவாது இதனை செய்யுங்கள்...
- இங்கு தூக்கு தண்டனையை ஆதரிக்கும் அனைவருக்கும் ஒன்று கூறி கொள்ள விரும்புகிறேன் .தெரிந்தோ தெரியாமலோ இந்த கேசில் சிக்கியவர்கள் தான் இவர்கள். இருபது வருடம் சிறையில் வைத்து விட்டீர்கள்.இனிமேல் கடைசி நேரத்திலாவது கொஞ்சம் கருணை காட்ட கூடாதா.கொலைக்கு கொலை என்றால் நம்நாட்டில் எத்தனை பேரை தூக்கில் போடலாம். அடுத்த நாட்டு காரன் என்ன பெரிய தப்பு செய்தாலும் ஈசியா 6 அல்லது 7 வருடம் தான் தணடனை.மொத்தத்தில் ராஜூவ் கொலை அரசியல் வாதிகளால் திட்டமிட்ட ஒன்று .ஓரிரு புகைபடங்கள் தான் வெளியாயின.வீடியோ ஆதரங்கள் எங்கே.மக்களுக்கும் அறிவிக்காமல் இரகசியமாய் முதன்முறையாக விசாரணைகள் அனைத்தும் வெளிஉலகிற்கு தெரியாமல் நடைபெற்றது ஏன்.இலங்கைக்கு இவ்வளவு இராணுவ உதவி செய்தும் பிரபாகரனை உயிருடன் ஏன் பிடித்து ஒப்படைக்க சொல்லவில்லை.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி பிரபாகரன் என்று தானே நம்பப்படுகிறது.எல்லாமே புரியா புதிர்....... எனவே அப்போது 19 வயதாயிருந்த இவன் தான் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி போல் தண்டனை வழங்குவது தவறுதான்.இரண்டு நாட்களுக்கு முன்புவரை நானும் நமது பிரதமரை கொலைக்கு காரணமாயிருந்தவர்களை தப்பிக்க விடவேண்டாம் என்று தான் கூறினேன் .ஆனால் தற்போது மனதில் சிறியதாக அனுதாபம் தோன்றுகிறது....... கொலைக்கு கொலைதான் தணடனை என்றால் அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடுமே...ராஜூவ் இருந்த மேடையில் வேறு முக்கிய அரசியல் புள்ளிகள் யாரும் இருந்ததாகவோ... யாரும் செத்ததாகவும் இல்லையே ஏன்.அப்போதும் இப்போதும் உள்ள நமது முதல்வர் கூட மேடையில் இல்லையே ...சிந்தியுங்கள் தமிழர்களே.....................
இந்தியாவில் சட்டங்கள் மிகவும் கடுமையானது. தூக்கு தண்டனை தவிர்க்க முடியாத ஒன்று என்பது உலகம் அறிந்ததே!.இருந்தாலும் ஒரு 50 வருஷம் தள்ளிபோட சட்டத்தில் நிறைய வாய்ப்புள்ளது.
ReplyDelete