மத்திய அரசும், ஹசாரே குழுவினரும் தனது நிலையில் விட்டு கொடுக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஹசாரே கைதால் நாடு முழுவதும் எழுந்த சிக்கலை சரிகட்ட இருவரும் தனது நிலையில் இருந்து இறங்கி வரவேண்டும் என அவர் கருத்து தெரிவித்தார்.
திருடன், கொலைகாரன் கூட திருந்தி தவறுக்கு பிராயசித்தம் தேடுவான். நமது அரசியல்வாதிகள் என்றுமே திருந்த மாட்டார்கள். சட்டசபையை புறக்கணிக்கும் கருணாநிதி, பாராளுமன்றத்தில் என்ன செய்வது என தெரியாத அவர் கட்சி MP க்கள், காங்கிரஸ் உடன் சேர்ந்து நாங்களும் ஊழலுக்கு துணை நிற்போம் என சொல்லும் AIADMK MP க்கள், கேட்டால் பிரதமரை லோக்பாலுக்குள் கொண்டுவரகூடாது என்பதே எங்கள் கட்சியின் கொள்கை என கூறும் அரசியல்வாதிகள் மற்றும் பிரதமரையும் லோக்பாலுக்குள் கொண்டுவர வேண்டும் என கூறிக்கொண்டு பாராளுமன்றத்தில் வேடிக்கை பார்க்கும் DMK MP க்களைவிட திகார் ஜெயிலில் இருக்கும் கைதிகளுக்கு தேச பக்தி அதிகம் என்பதை இது உறுதி செய்கிறது.
No comments:
Post a Comment