Thursday, 1 September 2011

இந்திய கடற்படை கப்பலைவழிமறித்த சீன போர்க் கப்பல்

கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த இந்திய கடற்படை கப்பலை சீனப் போர்க் கப்பல் வழிமறித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை இந்தியா மறுத்துள்ளது.தென் சீனக் கடல் முழுமையும் தனக்குத் தான் சொந்தம் என, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், இக்கடற்பகுதியில் அமைந்துள்ள வியட்னாம், மலேசியா, புருனே மற்றும் தைவான் நாடுகள் தங்களுக்கும் அதில் உரிமை உள்ளது என வாதாடி வருகின்றன.அரிய கடல் வளம் நிறைந்த இப்பகுதியில் சீனா தனது கடற்படை கப்பல்களை ரோந்து விடுவதன் மூலம், தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தொடர்ந்து முயல்கிறது. இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணு
பிரகாஷ் கூறியதாவது: சீனப் போர்க் கப்பல் இந்தியக் கப்பலை இடைமறிக்கவில்லை. சம்பவம் நடந்த 22ம் தேதி, தென் சீனக் கடலில், வியட்னாம் துறைமுகத்தில் இருந்து 45 கடல் மைல் தொலைவில் இந்தியக் கப்பல் நின்று கொண்டிருந்தபோது, "நீங்கள் சீனக் கடல் எல்லைக்குள் வந்து விட்டீர்கள்' என ஒரு சீனக் கடற்படையிடம் இருந்து ரேடியோ தொடர்பு வந்தது. ஆனால், இந்தியக் கப்பல் அருகிலோ அல்லது சற்று தொலைவிலோ எந்த ஒரு கப்பலும் காணக் கிடைக்கவில்லை.எனினும், தென் சீனக் கடல் உள்ளிட்ட சர்வதேசக் கடற்பகுதிகளில் ஒப்புக் கொள்ளப்பட்ட சர்வதேச சட்டப்படி, பிற நாட்டுக் கப்பல்கள் வந்து செல்வதற்கான சுதந்திரம் பேணப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இவ்வாறு விஷ்ணு பிரகாஷ் தெரிவித்தார்.
In English:
An Indian Navy vessel appears to have been warned by the Chinese Navy off the coast of Vietnam against entering "Chinese waters" in late July, but India sought to downplay the incident on Thursday.The statement went on to say that "there was no confrontation involving the INS Airavat." However, the ministry added that "India supports freedom of navigation in international waters, including in the South China Sea, and the right of passage in accordance with accepted principles of international law. These principles should be respected by all." 

சமேரியம், நியோடினியம் போன்ற அபூர்வமான சக்தி வாய்ந்த காந்தங்கள் செய்ய தேவையான தாது பொருட்கள் இந்த கடல் பகுதியில் அதிகம். தற்போது சீனாதான் உலகில் இந்தவகை தனிமங்களுக்கு மிகப்பெரிய ஏற்றுமதியாளர். ஜப்பான் சீனாவின் கொட்டத்தை அடக்க அதன் கடல் பகுதியில் இந்த வகை தனிமங்கள் பெரிய அளவில் இருப்பதாக கண்டு பிடித்து அதை எடுக்கவும் ஆரம்பித்து விட்டது. ஆனால் நாமோ ஜாலியாக அதைப்பற்றி ஒன்றுமே தெரியாதது போல் புண்ணாக்கு போல் இருப்போம். அடுத்து வரும் வருடங்களில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் செய்யும் துறை அதிக வளர்ச்சி அடையும். பாட்டரி செய்ய தேவையான லித்தியம் கூட சீனாவால் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீனாவை நம்மால் எட்டி பிடிக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறியே!  

இந்தியாவை தரக்குறைவாக உலக அரங்கில் சித்தரிப்பதே சீனாவின் வேலை. இந்தியாவில் எந்த ஒரு சம்பவம் நிஹழ்ந்தலும் உடனே சீன தொலைகாட்சிகளில் ஒலி பரப்பபடுகிறது. இதை பார்க்கும் மற்ற நாட்டினரும், சீனரும் இந்தியாவை குறைவாகவே மதிப்பிடுகிறனர். நமது அரசியல் வாதிகளின் வேற்றுமையால் இந்தியாவிற்கு என்றுமே ஆபத்து அதிகம். சீனாவை பற்றி ஒரு சிறு தகவலும் நம் நாட்டினரால் பெற முடியாது ஆனால் நம் நாட்டில் சீன தொலைகாட்சிக்கு நிருபர்கள் அதிகம். கேவலமாக சித்தரிப்பதகு அவர்கள் உதவுவார்கள். நம்மிடம் உள்ள வேற்றுமையால் உலக நாடுகள் நம்மை முழுமையாக உணரவில்லை. இந்த பகுதியில் கூட யாரும் ஒருகித்த கருத்துகள் பரிமரபடவில்லை. எப்போதும் மற்றவரை விமர்சிப்பதில் (கேவலமாக விமர்சிப்பதில் ) தான் அதிக பதில்கள். என்று நம் நாடு ஒற்றுமையுடன் தேச பற்றுடன் திகளுமோ அன்றுதான் நாம் வல்லரசு கனவை எட்டுவோம். ஆதங்கத்துடன்

 இந்த சம்பவத்தை வெளிப்படையாக ஒத்து கொள்ள வேண்டும் இந்திய அரசு.இந்திய கப்பல் பதிலுக்கு என்ன செய்தது என்பதுவும் மக்களுக்கு தெரியவேண்டும்.லங்காவில் அட்டகாசம் செய்கிறார்கள்,காஷ்மீரில் மூக்கை நுழைக்கிறார்கள், வாலாட்டுகிறார்கள், திபெத்தில் அச்சுறுத்துகிறார்கள்,நமது நாடு ஏன் அடங்கி கிடக்கிறது.... பயப்படுகிறது போல் தெரிகிறது அல்ல, பயப்படுகிறது என்பதே உண்மை

No comments:

Post a Comment